Saturday 16 December 2017

இலங்கை வானொலி அறிவிப்பாளர் நாகபூஷணி அவர்களுக்கு விருது

     



          இலங்கை வானொலியில் அன்றும் இன்றும் தனது குரலால் வானொலி கேட்கின்ற அனைவரையும் மகிழ்வித்துக்கொண்டிருக்கும் ஒரு அறிவிப்பாளர் கவிதாயினி, இலக்கிய குயில் நாகபூஷணி அவர்கள். இவர் மலையக ராணியாக உலாவந்து கல்வியிலும் பட்டம் பெற்று அங்கேயே தனது தரத்தை உயர்த்தி வானொலி என்னும் கலை உலகத்தில் நுழைந்து படி படியாக முன்னேறி இன்று பல விருதுகளை பெற்று எல்லோரையும் வியந்து பார்க்க வைத்திருக்கிறார். சிலர் நமக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என்று வருந்துகிறார்கள் ஆனால் இவருக்கோ விருதுகள் இவரைத் தேடி வருகிறது.



இவர் பெற்ற விருதுகள் ஏராளம் அதை் சொல்வதற்கு இந்த பக்கமே போதாது என்று நினைக்கிறேன் விருதுகென்றே பிறந்தவர் போலும். படிக்கின்ற போதே கல்லூரியில் கலைமாமணி பட்டம் பெற்றவர். இந்த விருது இவருக்கு புதிதல்ல இந்த ஆண்டு தொடக்கத்திலே இரட்டை சதம் போல் இரண்டு விருதுகள் வாங்கினார் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருது சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது இந்த ஆண்டு 14.12.2017  அன்று சிறந்த செய்தி வாசிப்பாளுக்கான மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டு இருக்கிறது. இவரிடம் திறமை இருப்பதால் இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது இதை அனைவரும் அறிவர். சிலர் செய்தி வாசித்தால் ரேடியோவை ஆப் பண்ணத்தோணும் ஆனால் இவர் வாசிக்கும் போது அதைக் கேட்கத்தோணும் அதுதான் இவரது பாணி, அதுமல்ல நிகழ்ச்சி தொகுப்பாகட்டும்,  மேடை நிகழ்ச்சியாகட்டும், விளம்பர நிகழ்ச்சியாகட்டும், மருத்துவ நிகழ்ச்சியாகட்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சியாகட்டும் திறம்பட அதை நடத்தி முடிப்பதில் வல்லவர். அதனால்தான் நிறயை நிகழ்ச்சிகள் இவரைத் தேடி வருகிறது இவர் செய்தால் இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருக்குமென்று நம்பி இவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த விருதுகள் எல்லாம் அவரின் தனித்திறமையால் கிடைத்தவை என்பது.நிதர்சனமான உண்மை இதை பலரும் அறிவர். நான் இன்னொன்றை இங்கு பதிவு செய்கிறேன் நான் பள்ளியில் படிக்கும் போது தமிழ் மீது அத்தனை பற்று கிடையாது இலக்கியம் பாடம் வந்தால் எப்படா இது முடியும் என்று உட்கார்ந்து இருப்பேன். சில நேரங்களில் தூக்கமும் வரும் செய்யுளோ அல்லது வெண்பாக்களோ மனப்பாடம் செய்ய அத்தனை போராட்டமா இருக்கும் ஆனால் இவரின் இலக்கிய நிகழ்ச்சி கேட்ட பிறகுதான் தமிழ் இத்தனை இனிமையானதா என்று ரசிக்கவே ஆரம்பித்தேன். அதன் பிறகுதான் இது புறநானூறு, இது அகநானூறு,  இது குறுந்தொகை என்று பாடல் வரிகளை பார்த்தவுடேனே கண்டு பிடிக்கும் அளவுக்கு இலக்கியத்தின் மீது ஒரு ஈர்ப்பு வந்தது அதுமட்டுமல்ல பலர் இன்று நீங்கள் இலக்கியம் படித்தவரா நீங்கள் பேசுகின்ற விதம் அவ்விதம் காட்டுகிறது என்று கேட்கும் அளவிற்கு வைத்திருக்கிறது என்றால் அது இவரின் நிகழ்ச்சியை கேட்டதால் மட்டுமே என்று எங்கு வேண்டுமென்றாலும் சொல்வேன் நான் மட்டுமல்ல என்னைப் போன்று பலர் அவ்விதம் சொல்வார்கள் அந்தளவிற்கு நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் வல்லவர்.

இன்றும் அன்றும் விளம்பரங்களில் இவரின் குரல்தான் எங்கும் ஒலிக்கிறது. இவரின் குரலில் அப்படி என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை நேயர்களை காந்த சக்தியாக இழுக்கிறது. தமிழை மிக அழகாக உச்சிரிக்கும் விதம் பலரை கவர்ந்தது என்று சொல்லாம். வடமொழி எழுத்துக்களை பலர் சரியாக உச்சரிப்பது இல்லை ஆனால் இவர் சரளமாக மிகத்தெளிவாக உச்சரிப்பார். செய்தி வாசிக்கும் போதும், நிகழ்ச்சி தொகுக்கும்போது ஒரு முறை கூட சிறு தடுமாற்றமோ, பிழையோ இதுவரை இருந்ததே இல்லை. இவர்  கல்வியிலும் மட்டுமல்ல ஊடகத்துறையிலும் தரம் மிக்கவர் என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த பொறாமை நிறைந்த உலகத்தில் அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளி போராடி இந்த வெற்றி அவருக்கு கிடைத்திருக்கிறது. இவரின் அமைதிக்கும், பொறுமைக்கும், திறமைக்கும் கிடைத்த விருதாக நான் கருதுகிறேன். இவர் மேல் பொறாமை கொண்ட சிலர் இவருக்கு ஏன் இரண்டு விருதுகள் என்றெல்லாம் விமர்சித்துள்ளார்கள் அவர்களெல்லாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். திறமை எங்கு இருக்கிறதோ அங்கு விருதுகள் தானாகத் தேடி வரும். நமக்கு கொடுக்கின்ற வேலையை சரியாக செய்தால் வெற்றி நம்மைத் தேடி வரும் என்பதற்கு சிறந்த உதாரணம் இவர்.

இவரின் பணி இன்னும் சிறக்க இன்னும் பல விருதுகள் பெற வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன். 

No comments:

Post a Comment