Sunday 17 September 2017

கண்ணில் பதிந்த காட்சிகள்

வெள்ளிக்கிழமை வந்தாலே பேருந்து நிலையங்கள் எப்போதும் நிரம்பி வழியும். அது போல் ஒரு நாள் நான் ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தேன்... நிரமாத கர்ப்பிணி கூட வேகமாக நடந்தய விடுவாள் ஆனால் இந்த பேருந்துக்கள் நகர முடியாமல் நகர்ந்து சென்று கொண்டிருந்தது அந்த நெடுஞ்சாலையில்.  அப்போது ஒரு தாய் இரண்டு பெண் பிள்ளைகளோடு ஏறினாள்...



கன்டக்கடர் அவர்களை பார்த்து "இடம் இல்லம்மா... ரொம்ப தூரம் உங்களால நிற்க முடியாது வேற பஸ்ல வாங்க.. " என்றார்.

"பரவாயில்லை சார் நாங்க கீழ உங்காத்துட்டு வர்றோம் ... "என்றபடி பஸ் ஏறியது. பஸ்சில் ஒரு இடம் மட்டும்தான் இருந்தது எனக்கும் முன் சீட்டில் ஒரு பெண்ணை நீ போய் அங்க உக்காந்துக்க என்று சொல்லிக்கொண்டே வந்தது. அந்த பெண்ணோ இல்லை அவள் உக்காரட்டும் நான் உங்க கூட நின்னுகிட்டே வர்றேன் என்றது.

இன்னொரு பெண்ணோ போய் அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டது. அந்த பெண்மணியோ நீ.. போ.. நீ.. போ... உன்னால நிக்க முடியாது.. நீ கீழே எல்லாம் உக்கார மாட்டே போ.. போ... என்று கோபமாக சொல்லிக்கொண்டே இருக்கிறது. அருகில் இருந்த நான் இரண்டும் அவரோட குழந்தைதானே பிறகு ஏன் இந்த பெண்ணை மட்டும் உட்கார சொல்கிறார் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.

அந்த பெண்மணியோ இந்த பெண்ணை நீ போய் உட்கார்.. நீ போய்.. உட்கார் நாங்க ரெண்டு பேரும் பேசிட்டே வரும் நீ பேச மாட்டே நீ போ... நீ போ.... என்று நொய்.. நொய்..னு சொல்லிக்கொண்டே இருந்தார்..

அந்த சீட்டில் உட்கார்ந்து இருந்த பெண்ணோ.. அதிலிருந்து எழுந்து வந்து நீ போய் உட்கார் என நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை உட்கார வைத்தது. அதன் பிறகு அந்த அம்மாவும், அந்த பெண்ணும் வாசற்படிற்கு எதிரே காலை தொங்க போட்டுக்கொண்டு அமர்ந்தார்கள். ஓடும் பேருந்தில் காற்று ஜில்லென்று முகத்தில் அறைந்தது..

நான் மொபைலை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தேன்.. அதே நேரத்தில் மனமோ வேறொன்று நினைத்துக்கொண்டு இருந்தது. சீட்டில் இன்னொரு பெண்ணை அந்தம்மா ஏன் உட்கார வைத்தது அப்போ அதுதான் இவர் மகளோ இந்த பெண் வேற யாரோ இருக்குமோ.. என்று அந்த பெண் மீது எனக்கு இரக்கம் பிறந்தது.  அப்போது அந்த காட்சி என் கண்களை கவர்ந்தது. பஸ் போகின்ற வேகத்தில் ஸ்பீடு ப்ரேக்கில் பஸ் ஏறி இறங்கியது அப்போ அந்த பெண் நிலை தடுமாறு போது அருகில் இருந்த அந்தம்மா தாவி பிடித்தது . அதன் பிறகு அந்தம்மா அந்த பெண்ணின் ஒரு கையயை தன் கையோடு கோர்த்து தன் மடியில்   வைத்துக்கொண்டது அதில் ஒரு அன்பு தெரிந்தது. இரண்டு பேரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி ஏதோ பேசி சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.. அதை பார்த்த என் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. அவர்கள் இருவரையும் ஏக்கத்தோடு வெகுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தன என் கண்கள். அந்த நேரத்தில் என் மனமோ வேறொரு காட்சியை மனக்கண்ணில்  கொண்டு வந்தது.  அந்த பெண் இருந்த இடத்தில் நானும் அந்தம்மா இருந்த இடத்தில் என் நண்பியையும் வைத்து இப்படி பயணித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தப்படி இருந்தேன். இது போன்று ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்குமா... கிடைக்கவே கிடைக்காது என மனதிற்குள் சொல்லிக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன்.

வெகுதூரம் சென்றதும் ஒரு இடத்தில் பஸ் நின்றது அங்கே டீ, காபி குடிப்பவர்கள் குடிக்கலாம் பாத்ரூம் போகின்றவர்கள் போய் வரலாம் அங்குதான் எல்லா பஸ்களும் நிற்கும். விருப்பப்பட்டவர்கள் இறங்கி அவரவர் வேலைகளை செய்தனர்.  பத்து நிமிஷத்திற்கு பிறகு பஸ் பறப்பட தயாரானது. இப்போது நான் கண்ட காட்சி மாறியது அந்தம்மாவிற்கு அருகே சீட்டில் உட்கார்ந்து இருந்த இன்னொரு பெண் இருந்தாள். அந்தம்மாவுக்கும் இந்த பெண்ணிற்கும் கொஞ்சம் இடைவெளி இருந்தது. என் மனம் மறுபடியும் குழம்பியது அப்போது இது அந்தம்மா பொண்ணு இல்லையோ நாமதான் தப்பா நினைச்சுட்டோமோ என்று யோசிக்க செய்தது..


இந்த பெண்ணோ ஒன்றும் பேசாமல் அமர்ந்து இருந்தது.. சற்று நேரத்தில் அதே ஸ்பீடு ப்ரேக் வந்தது அப்போதும் இந்த பெண் நிலைதடுமாற டக்கென்று அருகில் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டது அருகில் இருந்த அந்தம்மாவோ எதையும் கண்டு கொள்ளாமல் தூங்குவதற்கு தயாராக இருந்தது.

இப்போது என் பார்வை வேறாக இருந்தது. என் மனமோ இந்த பெண் தனியா உட்கார்ந்து இருக்கே அய்யோ.. பாவம் இல்ல என்று நினைத்தது. மீண்டும் என் கண்கள் இந்த பெண்ணிற்காக இரக்கத்தோடு பார்த்தது... ஓடும் பேருந்தில் அந்த பெண் நிலை தடுமாறும் போது பஸ் கம்பி மட்டுமே அது துணையாக இருந்தது.

அந்த இரவில் என் கண்களோ தூக்கத்தை தொலைத்துவிட்டு அந்த பெண் தவறி விழுந்திட கூடாதே என்று கண்கொத்தி பாம்பாக பார்த்தபடி இருந்து...

No comments:

Post a Comment