Friday 18 August 2017

பசலிகீரை சாம்பார்

தேவையான பொருட்கள் :-

பசலி கீரை - ஒரு கட்டு
பாசிப்பருப்பு - 100 கிராம்
தக்காளி - 2
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் -5
உருளை கிழங்கு பெரியது - 1
கத்தரிக்காய் - 1
மிளகாய்த்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் துறுவல் - 1 கப்
சீரகம் - 1 ஸ்பூன்


செய்முறை :-

பசலி கீரையை கிள்ளி வைத்துக்கொள்ளவும் பிறகு நீரில் கழுவிக்கொள்ளவும். தேங்காய் துறுவலோடு சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், உருளை, கத்தரிக்காய் இவைகளை நறுக்கிக்கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பு, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் , மஞ்சள்த்தூள்ஆகியவற்றை வேக வைக்கவும் நன்றாக வெந்ததும் காய்கறிகளை அதில் போட்டு தேவையான உப்பு சேர்த்து வேகவைக்கவும். சிறிது நேரத்திற்கு பிறகு அரைத்த தேங்காயயை சேர்த்து கூடவே மிளகாய்த்தூளை சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது இன்னொரு எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலையை போட்டு வெடித்ததும் பசலிகீரையை அதில் போட்டு வதக்கி கொதிக்கின்ற சாம்பாரில் போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கவும்.

இப்போது சுவையான, ஹெல்த்தியான பசலிகீரை சாம்பார் ரெடி..


4 comments:

  1. விள்க்கம் ந்ன்று!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.. உங்கள் வருகைக்கு

      Delete
  2. முயற்சிக்குறேன்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள்... நன்றி

      Delete