Friday 30 June 2017

இலங்கை வானொலியின் குரல்

               முன்பு இலங்கை வானொலி கேட்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது, அதில் வானொலி மன்றங்கள் வேறு இருந்தது. ஒரு குரூப் வானொலியில் பாடல் கேட்டுவிட்டு நம்ம பெயர் வராதா என்று வானொலிக்கு அருகே காத்து கிடந்தவர்கள் ஏராளம். இந்த நாள் எந்த அறிவிப்பாளர் வருவார் என்று காத்து கிடந்தது ஒரு கூட்டம்..  இன்னும் சிலர் ஆக்கங்களை எழுதிவிட்டு நமது பிரதி இன்று வருமா என்று காத்து கிடந்தவர்கள் ஒரு பக்கம்.  தனது பிரதி ஒலிபரப்பானால் சந்தோஷமும் வரவில்லை என்றால் எதிர்பார்ப்போடு காத்திருந்தவர்கள் ஏராளம் ஏராளம்... 

Monday 26 June 2017

காரம்

விடுமுறை நாட்களில்
விதவிதமா சமைச்சு
அம்மாவுக்கு கொடுக்கையில்
எனக்காச்சும் இதெல்லாம்
கிடைக்குது சிலருக்கு
பழைய கஞ்சி கூட
கிடைக்குதுல்லன்னு அம்மா
சொல்கையில் ஆசையாய்
அள்ளி சாப்பிட்ட மீன் குழம்பு
தொண்டையில் சிக்கி
நறுக்கென்று குத்துகிறது
கண்களில் கழுக்கென்று
கண்ணீர்த்துளி கண்களை
துடைத்தப்படி சாப்பிடுகிறேன்
குழம்பில் காரம் கொஞ்சம்
அதிகம்தான் இல்ல..!

Monday 12 June 2017

தாய்மடி

பவுர்ணமி நிலா
பட்ட பகலாக எரிய
வட்ட வாசலில்
உற்றார் உறவினார்
ஊர்கதை பேச
அம்மா மடியில்
படுத்து பாதி கதை
கேட்டும் கேட்காமலும்
தூங்கிய காலம்
இனி வரப்போவதில்லை