Friday 27 January 2017

கோக்கும் பெப்சியும் வேண்டா ம்

வணக்கம் நட்புக்களே....

           நான் வெளிநாட்டில் உற்பத்தியாகும் எந்த பொருளையும் பயன்படுத்துவதில்லை. கோக், பெப்சி, போன்ற குளிர்பானங்களை நான் தொட்டு கூட பார்ப்பதில்லை. இன்று வரை கடலை எண்ணெய்யில் தான் சமையல் செய்கிறேன். பீட்சா, பார்க்ஹர் எதுவும் சாப்பிட்டதில்லை. காய்கரி சந்தையில்தான் காய்கரிகறி வாங்குகிறேன். குளிரூட்டும் அறையில் எந்த கடையிலும் நான் பொருட்கள் வாங்குவதில்லை. ஏனெனில் அவைகள் எல்லாம் வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு அதில் உள்ள நல்ல சத்துக்கள் போய்விடுகிறது. அதனால் நான் அதை தவிர்த்து வருகிறேன். நான் சிறுவயதில் என்ன சாப்பிட்டேனோ அதைதான் இப்போதும் சாப்பிடுகிறேன்.

Sunday 22 January 2017

எது மிருகவதை...?

           


          அன்று இந்த காளை இல்லை என்றால் விவசாயம் இல்லை. மாட்டை ஏர்பூட்டி உழுதால் தான் நாற்று நட்டு, கதிர் அறுத்து நாமெல்லாம் உட்கார்ந்து சோறு திங்க முடியும்... அப்ப தெரியவில்லையா மாட்டை வதை செய்கிறோம் என்று, நெல்லை சாக்கில் கட்டி அந்த காலத்தில் மாட்டு வண்டியில் தானே ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்பட்டது அப்ப தெரியவில்லையா மாட்டை வதை செய்கிறோம் என்று... 

Saturday 21 January 2017

பெரும் இளைஞர்கள் கூட்டம் மெ ரினாவில்

         ஒருநாளில் முடிய வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு வாரமா நீடித்த பெருமை மத்திய அரசை சாரும்... மெரினாவில் நுழைந்த போது ஒரு கோவிலுக்குள் நுழைந்த ஒரு சந்தோஷம்... கும்பல் கும்பலாக இளைஞர்கள் ட்ரம்ஸ் வைத்து அடித்துக்கொண்டு கோசங்களை எழுப்பிக்கொண்டும், காவடி சுமந்து வருவதுபோல் மாடுகளை உருவாக்கி சுமந்து வந்த காட்சிகள் மெய்சிலிர்க்கிறது... ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து வருவதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஊர் திருவிழாவில் கலந்து கொண்டது போல் ஒரு உணர்வு... இதற்காக மோடிக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும்.

Thursday 19 January 2017

புதிய பாரதம் ....... Jallikkattu

           அன்று மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்து முக்கூடழ் ஆனது, இன்றோ மெரினாவில் இளைஞர்கள் தங்கள் வீரத்தை பறை சாற்ற முக்கூடல் ஆனது சென்னை... ஜல்லிக்கட்டு வீரத்திற்கு அழகு என்ற போதும் தமிழ் உணர்வுகளுக்கு இளைஞர்கள் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

Tuesday 3 January 2017

யாதுமாகி நின்றாள்

பா -  விதைக்கிறேன்...
அறுவடை செய்ய ஆளில்லாமலே!
சந்தம் - இசைக்கிறேன்...
யாசிக்க யாருமில்லாமலே!
நாண் - ஏற்றுகிறேன்...
இலக்கு தெரியாமலே - ஏனெனில்
நான் யாதுமறியாதவள்...
யாதுமாகி நின்றாள்!