Thursday 1 October 2015

முட்டைத் தொக்கு /சமையல்

தேவையான பொருட்கள்:
முட்டை - 1
இஞ்சி - சிறு துண்டு
சின்ன வெங்காயம் - 25 கிராம்
பூண்டு - 5 பல்
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
சோம்பு - சிறிது
மிளகாய்த்தூள் - 1/2 அல்லது 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - சிறிது


செய்முறை:

இஞ்சி ,பூண்டு, சோம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை அரைத்துக்கொள்ளவும். பச்சைமிளகாயை சிறிதாக நறுக்கவும்.

இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதை பச்சை வாசனை போக வதக்கவும், கூடவே அரைத்த தக்காளி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் அடிபிடிக்காமல் கிளறி பச்சைமிளகாய், சிறிது உப்பு, மிளகாய் சேர்த்து கிளறி தொக்கு பதம் வந்ததும் இறக்கி வேக வைத்த முட்டையை நான்காக வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.

இதை சப்பாத்தி, தோசை, இட்லி, பிரட் ஆகியவற்றுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும். அதோடு புரோட்டின் சத்தும் கிடைக்கும்.

No comments:

Post a Comment