Tuesday 1 September 2015

பருப்பு ரசம் செய்வது எப்படி

                நமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும்போது கிடைக்கிற திருப்தி எதிலும் இல்லை. பொதுவா நாம் செய்கின்ற சாம்பார் நல்லா இல்லை என்றால் அதை சரி செய்வது இந்த ரசம் தாங்க. சும்மா பூண்டை தட்டி போட்டு வைக்கிற ரசம் இல்லைங்க இது பருப்பு ரசம். பெரும்பாலும் இது எல்லோர் வீட்டிலும் வைப்பது இல்லை, கல்யாணவீட்டிலோ அல்லது ஹோட்டல்களில் மட்டும்தான் இதை வைப்பார்கள். இவர்கள் மட்டும் எப்படி வைக்கிறார்கள் நாம எப்படி வைத்தாலும் நல்ல வருதில்லையேன்னு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.

            இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் அட என்னங்க அப்படி பார்க்கிறீங்க .....  இப்பவே கிச்சனுக்கு வாங்க சூப்பரா ரசத்தை வைக்கிறோம் அசத்துறோம்.



தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 100 கிராம்
தக்காளி - 3
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
மல்லி (தனியா) - 2ஸ்பூன்
வரமிளகாய் - 3
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 3,4 பல்
துறுவிய தேங்காய் - 1 கப்
கடுகு - சிறிது
வெங்காயம் - சிறிது
கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி - சிறிது
மஞ்சள்தூள் - சிறிது
நெய் - சிறிது
புளி - சிறு எலுமிச்சை அளவு

செய்முறை:-

             வரமிளகாய், மல்லி, மிளகு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக்கொள்ளவும், பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.

              இப்பொது கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கடுகு, வெங்காயம், தக்காளி,பூண்டு,கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றை வதக்கி
வேக வைத்த பருப்பை சேர்த்து, கரைத்த புளித்தண்ண, தேங்காய்,உப்பு, அரைத்த பொடிகளையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். (கெட்டியாக தெரியும் உங்களுக்குத் தேவையான தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். மேலாக எடுத்தால் ரசம்)

இப்போது மணக்க மணக்க பருப்பு ரசம் ரெடி.

No comments:

Post a Comment