Thursday 26 March 2015

கல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..?


                பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட்டுகின்றனர். இது மதிப்பிற்குரிய பெண் மணிகளுக்கு பெருமை சேர்ப்பது வரவேற்க தக்க விடயம். ஆனால்,

                 இப்போது பரவலாக பத்திரிக்கைகளில் காணக்கூடிய செய்தி கல்லூரி பெண்கள் விபச்சாரம் செய்கிறார்கள் என்பதுதான். செய்திகளை படிக்கும் போதே சுள்ளென்று தலைக்கு ஏறுகிறது கோபம். பெண்களை கிண்டல், கேலி செய்பவர்களையும், பாலியல் வன்முறைகளை செய்பவர்களையும் வன்மையாக கண்டித்து சமூக நல அமைப்புகள், மாதர் சங்கங்கள் போராட்டங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பெண்களே தானாக முன்வந்து விபச்சாரம் செய்வது வன்மையாக கண்டிக்க தக்கது.


                அதிலும், படித்த கல்லூரி பெண்கள் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், ஜாலிக்காகவும் இதை செய்வதாக சொல்கிறார்கள். இது ஒரு நெட் வொர்க்காக செயல்படுவதாகவும் தெரிகிறது. ஒரு பக்கம் நல்ல பெண்களுக்கு அநீதி நடக்கிறதே என்று அதிர்ச்சியில் இருக்க இன்னொரு பக்கம் தானாக இந்த பெண்களே தொழிலாக செய்வது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்தான் அதற்காக எல்லை மீறி சுதந்திரம் நாட்டுக்கு ஆகாது.

                 பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பதற்கு முதற்காரணம் "கற்பு என்ற ஒன்றை கடவுள் கொடுத்ததால் தான். பெண்களே! நீங்கள் அந்த புனிதத்தை கெடுக்கலாமா? அதை பாதுகாக்க வேண்டாமா? பல வருடங்களுக்கு முன்பு பெண்கள் தவறு செய்துவிட்டால் வேறு வழியில்லை மாட்டிக்கொள்வோம் என்ற பயம் இருந்தது. இப்போது தவறு செய்தால் அதற்கு மருத்துவ வசதி இருக்கிறது ஒரு தீர்வு இருக்கிறது. ஆனால் அந்த பயம் என்ற உணர்வு இல்லாததினால்தான் பெண்கள் தயங்காமல் இந்த தவறை துணிந்து செய்கிறார்கள்.

                 பெண்களுக்கு சுதந்திரம் என்பது வேண்டும் அது எல்லை மீறிய சுதந்திரமாக இருக்க கூடாது. இவர்கள் இப்படி மாறுவதற்கு என்ன காரணம்? மேலை நாட்டு கலாச்சாரமா? ஆடம்பர மோகமா? இல்லை இப்போது எல்லாம் விபச்சாரம் செய்பவர்களை பாவம் என்று சொல்வதால் அது தவறில்லை என்று நினைத்துக்கொண்டார்களா அல்லது அவர்கள் அதற்கான காரணத்தை சொல்லி நாங்கள் இப்படி ஆனதற்கு காரணம் என் வறுமையை போக்க, என் குழந்தைக்காக. என் குடும்பத்திற்காக என்று தன் தவறை நியப்படுத்துகிறார்களே அவர்களைப் பார்த்து இந்த பெண்கள் தன்னை மாற்றிக்கொண்டார்களா? தவறு செய்பவர்களிடம் இரக்கம் காட்டினால் இப்படிதான் பல விளைவுகளை ஏற்படுத்தும்.

                  "எங்கே தவறுகள் மன்னிக்கப்படுகிறதோ அங்கே இன்னொரு தவறுக்கு அனுமதிக்கப்படுகிறது" பாலியல் வன்முறைகள் செய்பவர்களும் சரி, விபச்சாரம் செய்பவர்களாக இருந்தாலும் சரி இவர்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இதைக் கட்டுக்கொள் கொண்டுவர முடியும்.

                  இந்திய பெண்களுக்கு என்று தனி கட்டுப்பாடு இருக்கிறது, தனி பாரம்பரியம் இருக்கிறது, தனி கலாச்சாரம் இருக்கிறது. கல்லூரி பெண்களே கற்புள்ள பெண்ணாக இருக்க முயற்சி செய்யுங்கள். உயிரை விட மானம் பெரிதென நினைப்பவர்கள் பெண்கள். சீதை தான் கற்புக்கரசி என்று தீக்குளித்து நிருபித்தாள், கண்ணகி மதுரை நகரை தீயிலிட்டு கொளுத்தி நிரூபித்தாள், மாதவி தாசிக்குளத்தில் பிறந்தவளாக இருந்தாலும் கற்பு நெறி தவறாதவளாக இருந்தாள், காந்தாரி, தமயந்தி, சாவித்திரி என சொல்லிக்கொண்டே போகலாம். நாம் எதையும் நிரூப்பிக்க தேவையில்லை ஒழுக்கமாக இருந்தாலே போதும்.

                   நிறைய கற்புக்கரசி நம்மண்ணில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களின் புனிதத்தை சில தவறான பெண்கள் கெடுக்காமல் இருந்தால் நல்லது. ஏழையாக இருந்தாலும் மானத்தோடு வாழ வேண்டும் அதுதான் உலகில் அளவில்லா செல்வம்.

                  கல்லூரி பெண்கள் பாடங்களை படிக்காமல் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சரியா? இது கேவலமான, இழிவான, அறுவருப்பான செயலாக தெரியவில்லை. சரி இவர்களின் பெற்றோர்கள் இதையெல்லாம் கவனிக்காமல் என்ன செய்துகொண்டு இருக்கிறார்களோ தெரியவில்லை. இது போன்ற பெண்களால் எல்லா பெண்களையும் தவறான கண்ணோட்டத்திலே பார்க்க வைக்கும் என்பது வருந்தகூடிய ஒரு விஷயம்.

9 comments:

  1. பெண்கள் விரும்பி விபச்சாரம் செய்வது எதற்காக?
    - வறுமைக்காகவா?
    - குடும்பத்திற்காகவா?
    - ஆடம்பரத்திற்காகவா?
    - குழந்தைக்காகவா?
    - ஏமாந்து போயா?
    - சூழ்நிலையால?

    இல்லை, இல்லவே இல்லை
    ஒரேயொரு காரணம் - அதுதான்
    இரண்டெழுத்துக் கொழுப்பு.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். கண்டிப்பதற்கு ஆள் இல்லாததால்தான் இவர்கள் துணிந்து இந்த தவறை செய்கிறார்கள்.

      Delete
  2. வணக்கம்

    படித்தவர்கள்... இவர்கள் இப்படியான வேலையை செய்ய மாட்டார்கள்... அருமையாக சொல்லியுள்ளீர்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்! தங்கள் வருகைக்கும், தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன் அவர்களே..!

      Delete
  3. with reference to college girls, try to google "sugar daddy" and find out what's going on in western countires.

    ReplyDelete
  4. mostly another state college girls

    ReplyDelete
    Replies
    1. Its true. But the women of our country, which is believed to be trapped. whatever it is that ugly women.

      Delete
  5. which state women, do not forget that a first she was a women.

    ReplyDelete