Thursday 11 December 2014

ரசிப்பதற்கு மட்டும்

அழகுப் பெண்ணின் 
முகத்தில் இருக்கும்
பருபோல் பூக்களின்
மேலிருக்கும் மழைத்துளி..!

இரவெல்லாம் காத்திருந்து
கதிரவனைக் கண்டதும்
உருகும் ஒற்றைப் பனித்துளி..!


தங்க காசை உண்டியலில்
போடுவது போல் மறையும்
மாலைச் சூரியன்..!

நாணம் கொண்ட 
பெண்போல் அடிக்கடி முகத்தை
மறைத்துக்கொள்ளும் நிலா..!

பருத்தி பஞ்சை 
பறக்கவிட்டது போல்
சிதறிக்கிடக்கும் மேகம்..!

மணல்மேடு
சிற்பங்களாய் விரிந்து கிடக்கும் பாலைவனம்..!

மழை வரும் முன் 
தோகை விரித்து 
வரவேற்கும் மயில்..!

எங்கோ மறைந்துகொண்டு
குரலை மட்டும் இசையாக தந்து
பாடும் குயில்..! 

இலைகள் இல்லாத
கிளைகளை சுமந்துகொண்டு
துள்ளி ஓடும் மான்..! 

வெள்ளிக் காசுகள் 
சிதறிக் கிடப்பதுபோல்
சலசலக்கும் நீரோடை..!

 வெள்ளிக் கொலுசை
 காலிலிட்ட சிறுகுழந்தையாய்
 தாவி குதித்து வரும்
 கடல் அலை..! 

இவை அத்தனையும்
அழகுதான் நீ...
என்னருகில் இல்லாதபோது..!

4 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சார்..!

      Delete
  2. தங்க காசை உண்டியலில்
    போடுவது போல் மறையும்
    மாலை சூரியன் .

    இலைகள் இல்லாத
    கிளைகளை சுமந்து கொண்டு
    துள்ளி ஓடும் மான்.

    மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி சார்..!

      Delete