Sunday 9 November 2014

சொல்வதெல்லாம் உண்மை





             ஜீ தமிழ் எடுத்து இருக்கின்ற நல்ல முயற்சி சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி. பிரச்சனைகளை தீர்த்து வைக்கின்ற ஒரு நிகழ்ச்சியா நடத்திக்கொண்டு இருக்கிறது. நல்ல விஷயம்தான். ஆனால் யார் யாரின் பிரச்சனைகளை தீர்த்துவைக்கிறது? சமூகத்தின் பிரச்சனையா? அல்லது சமூகத்தில் உள்ள குடும்பங்களின் பிரச்சனையா? இதில் கலந்து கொள்ள வருகின்ற அனேக குடும்பங்கள் இரண்டு, மூன்று மனைவிகள் உள்ளவர்கள், கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள,இளம் காதலர்கள் இப்படிதான் அதிகம் வருகிறார்கள். இது சரியானதா?


          ஒருவன் 25 வயதுக்குள்ளே 5 திருமணம் செய்திருக்கிறான் அப்படி என்றால் அவன் எந்த வயதில் திருமணம் செய்ய தொடங்கியிருப்பான். சரி இதை விடுவோம் இது போன்ற நிகழ்ச்சி யாருக்காவது பயனுள்ளதாக இருக்கிறதா? இதைபார்ப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சம் தவறு செய்தவர்கள் சிறு மன உறுத்தலோடு தவறு செய்துவிட்டோமே என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் அந்த குற்ற உணர்வு போய் நாம் தான் தவறு செய்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் வீட்டுக்கு வீடு இப்படிதான் இருக்கிறதா என்று நினைத்துவிடுவார்கள்.

          நம்முடைய நிகழ்ச்சி சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க கூடியதாக இருக்க வேண்டும் தரமானதாக இருக்க வேண்டும். அது வெறும் குடும்பத்து பிரச்சினையாக இருக்கக் கூடாது. நாங்கள் என்ன செய்வது அவர்களாகதான் தங்கள் பிரச்சினைகளை மீடியாக்கு கொண்டு வருகிறார்கள் என்கிறீர்கள் அதற்காக எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள முடியாது. நாலு பேருக்கு தெரிந்த விஷயங்களை ஊருக்கே தெரியப்படுத்திக்கொள்ள வரும் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களா? இல்லை இவர்களெல்லாம் தினவெடுத்து விரும்பி சென்றவர்கள் காமத்தின் பிடியில் சிக்குண்டவர்கள் இவர்களை சேர்த்து வைக்க ஒரு நிகழ்ச்சியா?

          சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது எங்கள் ஊருக்கு நல்ல பள்ளிகூடம் இல்லை என்று புகார் செய்யலாம், நல்ல மருத்துவ வசதி இல்லையென்று புகார் செய்யலாம், நல்ல பேருந்து வசதியில்லை என்று புகார் செய்யலாம், நல்ல பேருந்து நிறுத்தம் இல்லையென்று புகார் செய்யலாம், நல்ல சாலை வசதியில்லை என்று புகார் செய்யலாம், குடிநீர் பிரச்சினை தீர புகார் செய்யலாம். பலவந்தமாக எத்தனையோ இடங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாம்.

          இப்படி தீர்க்க முடியாத எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது அதை தீர்த்து வைக்கலாம் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஊடகங்களில் புகார் செய்தால் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை பிறக்கும். அதனால் ஒரு கிராமத்திற்கு ஒரு ஊருக்கு நன்மை கிடைத்தால் நல்லதுதானே.

          ஒரு கொலைப்பற்றி கூட சொல்வதெல்லாம் உண்மை கண்டுபிடித்திருக்கிறது அது பாராட்டுக்குரிய விஷயம்தான். லெட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் அருமையா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி தொலைநோக்கு பார்வையோடும் சமுதாய நோக்கோடும் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment