Thursday 6 November 2014

சமுதாய சிந்தனைகளை கூறும் மகாபாரதம்

     

         பாரதப் பெருங்காப்பியம் குருகுலத்தாரிடை நிகழ்ந்த போர் பற்றி கூறுகிறது. உலக இலக்கியங்களுள் அளவாற் பெரியது பாரதம் என்பர். பாரத போர் நிகழ்ந்த காலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன 4500 வருஷங்களுக்கு முற்பட்டது என்கிறது " வெள்ளிடை மாலை" கலியுகத்தின் தொடக்கத்தில் ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக பாரதப் போர் நடந்ததாகவும் கூறுவர். ஒரு சிலர் துவாபரயுகத்தின் இறுதியில் கி.மு. 3139 என்றும் கி.மு. 3102 ல் நிகழ்ந்தது என்றும் பலவாறு பல கதைகள் புனைந்துள்ளனர். ஆனால் பாரத போர் உண்மையில் நிகழ்ந்திருக்க கூடும் ஏனெனில் நாமும் பாரத போரின் அடிப்படையில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


         ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் அந்த குடும்பத்தார் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்க கூடாது. இதில் தர்மம் எது? அதர்மம் எது? என்று மானிட உலகிற்கு புரிய வைப்பதற்கே மகாபாரதம் உருவானது. மகாபாரதம் பல சமுதாய சிந்தனைகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது அதில் நாம் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் தீயவைகளால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் நமக்கு தெளிவுப்படுத்துகிறது. இதில் ஒன்றை கவனிக்க வேண்டும்

         நல்லது செய்தவர்களுக்கு நன்மையும் தீமை செய்தவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. இதில் பலதரப்பட்ட குடும்ப சித்தரிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.  மனைவி, கணவன் இல்லாமற் போனாலும் கணவனுடன் வாழ்ந்தாலும் பிற ஆடவனுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பழக்கம் அரச குடும்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. காளிந்தியின் மகன் விசித்திரவீரியன் விண்ணுலகம் அடைந்தமையால் அவன் மனைவியர் அம்பிகை, அம்பாலிகை ஆகிய இருவரிடத்தும் சேர்ந்து மகவை உண்டாக்குமாறு வீடுமனை வேண்டிக்கொண்டாள் காளந்தி. வீடுமன் மறுத்திடவே வியாசன் ஏற்றுக் கொண்டான்.

"வியாதனைச் சேர்ந்த அம்பிகை திருதராட்டிரனைப் பெற்றெடுத்தாள்"

"வியாதனைச் சேர்ந்த அம்பாலிகை பாண்டுவைப் பெற்றெடுத்தாள்"

"வியாதனை சேர்ந்த தோழி விதுரனை பெற்றெடுத்தால்"

        கணவன் இறந்துவிட்ட நிலையில் அரச குடும்பத்தை நிலை நிறுத்த மாமியார் விருப்பப்படி நடைப்பெற்ற நிகழ்ச்சி இது. இது ஒரு புறம். இன்னொறு புறம் பாண்டு குந்தியுடன் இணைந்து இன்பம் துய்க்க இயலவில்லை முனிவரின் சாபத்தால் முடியாமல் போயிற்று ஆனால் குந்தி தான் அறிந்த மந்திரத்தின் மூலம் குழந்தே பேறு அடைந்தாள் கணவனின் ஒப்புதலோடு.

         குந்தி யமனிடம் வரம் பெற்று தருமனை பெற்றாள்" "வாயுவிடம் வரம் பெற்று வீமனை பெற்றாள்" "இந்திரனிடம் வரம் பெற்று அர்ச்சுனனைப் பெற்றாள்" குந்தி தானறிந்த மந்திரத்தை மாத்திரிக்கு கற்றுக் கொடுத்தாள் அவள் அசுவினி தேவர்களிடம் வரம் பெற்று நகுல சகாதேவனைப் பெற்றாள். ஆனால் சிலர் குறிப்பிடுகிறார்கள் இவர்களுடன் இணைந்து குழந்தை பெற்றார்கள் என்று கூறுவது தவறு அவர்கள் தெய்வமாந்தார்கள் இச்சைக்கு ஆட்படுவதில்லை.

         ஒரே குடும்பத்தில் தோன்றிய திருதராட்டிரன் காந்தாரி ஒருத்தியை மட்டும் மணந்தான். அவன் தம்பி பாண்டுவோ குந்தி, மாத்திரி இருவரை மணந்தான். இதிலிருந்து அரச குடும்பத்தில் ஒருவன் ஒருத்தி என்ற நிலை கிடையாது என்று அறிய முடிகிறது. அர்ச்சுனன் விற்போட்டியில் வெற்றிபெற்றுத் திரௌபதியை அடைந்தான். திரௌபதி பாண்டவர் ஐவருக்கும் மனைவியானாள். அதே நேரத்தில் பாரத குலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையும் காணப்படுகிறது. சான்றாக திருதராட்டிரன் காந்தாரியைக் கூறலாம். அதே போல் திருமணமே செய்து கொள்ளாத நிலையும் இருந்தது இதற்கு உதாரணம் பீஷ்மர் இவரை போன்ற ஒரு உத்தமர் இந்த உலகில் யாருமில்லை.

          மேற்காட்டிய குடும்பச் சித்தரிப்புகளை நோக்குங்கால் பல்வேறு நிலைகளை காணமுடிகிறது. இதிலிருந்து நமது குடும்ப சித்தரிப்புகளை காண முடியும். அது மட்டுமல்ல செய்நன்றியறிதல், வாக்குத் தவறாமை, பெரிய தாய் சிறிய தாய் வேறுபாடு காட்டாமை, தாய்பாசம், கற்ற கலைகளை மதிக்கும் பண்பு, பெரியோரை ஆசிரியர்கள் ஆகியோரை மதிக்கும் பண்பு குடும்ப பாசம் என பல விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. இதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் நாம் எடுத்துக் கொண்டால் நல்லதுதான்.

          ஒரு சமயம் நச்சு நீரை பருகியதால் வீமன் முதலான நால்வரும் இறந்தார்கள். அறக்கடவுளின் கேள்விக்கு விடையளித்த தர்மன் அறக்கடவுள் ஒருவனை உயிர் பிழைக்க செய்யலாம் என்று ஒரு மந்திரத்தை உபதேசித்தான் தருமன் அம்மந்திரத்தை உபதேசித்து நகுலனை உயிர்ப்பித்தான் அறக்கடவுள் ஏன் அவ்வாறு செய்தாய் என்று கேட்டப்போது அதற்கு தருமன் குந்திக்கு யான் ஒரு மகன் இருக்கிறேன் மாத்திரிக்கு மகனாகிய நகுலனைச் சிறிய தாயார் பொருட்டு உயிர்ப்பித்தேன் என்றான். அறக்கடவுள் மனமகிழ்ந்து மூவரையும் உயிர்பித்தார். ஒரு குடும்பத்தின் மக்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்த தருமனுடைய பண்பு எத்தனை சிறப்புடையது.

       கற்ற கலைகளை மதிக்கும் பண்பு துரியோதனன் போர் தொடங்குவதற்கு நாள் குறிப்பதற்காக சகாதேவனை அனுகினான் அவன் சோதிடக் கலையில் மகாக் கெட்டிக்காரன் தன்னை தேடிவந்தது எதிரி என்று தெரிந்தும் அதற்கான நாளை குறித்து கொடுத்தான். இதுதான் கலைகளை மதிக்கும் மரபு அது.

        பெரியோரை ஆசிரியரை மதிக்கும் பண்பு குருகுலத்தில் வயதில் மூத்தவர் பீஷ்மர் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றவர். அவர் எதிரியின் படையில் இருந்தாலும் பாட்டனார் என்ற முறையில் பீஷ்மரிடமும் ஆசிரியர் என்ற முறையில் துரோணாச்சாரியரை தருமன் ஆசிப் பெற சென்றான். குடும்பத்து மூத்தவரை கலைகள் கற்பித்த ஆசானையும் வணங்கியது இந்திய பண்பாட்டில் சிறப்பு வாய்ந்தது.

          ஆனால் இதில் கர்ணனுக்கு கன்னன் நெறிமுறைகளை மீறி சூழ்ச்சி செய்தது உண்மையே இது தமிழறம் அல்ல கண்ணன் செய்த நெறியிலா முறைகளை கூற தொடங்கினால் விரிப்பில் கண்கள் அகலும் இருப்பினும் கன்னனின் செயற்பாடுகள் பண்பாட்டுக்கு உரியவை அல்ல இருப்பினும் அது தர்மம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் என்பது நமக்கு விளங்குகிறது.

        இந்த மிகப் பெரிய மகாபாரதம் உருவானதே மானிட உலகிற்கு நியாய தர்மங்களை எடுத்துரைக்கவும் அதர்மங்களை அழிக்கவும் தான். தர்மத்தை மீறினால் என்னாகும் என்பதே இந்த மகாபாரதம் நமக்கு உணர்த்துகிறது. இதில் மாயக்கண்ணன் நெறிகளை மீறிய செயல்பட்டார் அதற்கு தண்டனையாக காந்தி சாபமிட்டாள் அந்த கற்புக்கரசியின் சாபமும் பலித்தது ஆக கடவுளின் தவறுக்கு கூடா தண்டனை கிடைத்தது என்பதும் மகாபாரதம் நமக்கு உணர்த்துகிறது. அந்த பாரதத்தில் வாழ்ந்த மாதர்கள் போலதான் நமது வாழ்க்கை நெறிகளும் இருக்கிறது என்பதை நாம் உணரதான் வேண்டும்.

2 comments:

  1. நானும் ஒரு கவிதை எழுதினேன்.
    இங்கும் பதிகிறேன்.
    வாசிப்பவர்கள் வாசிக்கட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    8-11-2014
    மகாபாரதம்.
    மகாபாரதம் இராமாயணம் இருபெரும் இதிகாசங்கள்.
    வியாசம் (விரித்தல்), மிக நீண்டதான பாரதம்.
    மகாசக்தியாம் இந்துசமயப் பிரதான நூலொன்று.
    தகாத சூதாட்டக் கொடுமை விவரணம்.
    தவறுக்குத் தண்டனை உறுதி – தேவையென்றும்
    தருமம் வெல்லுமெனும் நீண்ட காவியம்.
    குருவம்சப் பங்காளிகள் நிலவுரிமைப் போர்.
    குருவம்ச அத்தினாபுர ஆட்சிப் பிணக்கம்.

    வியாசமுனிவர் சொல்ல விநாயகர் எழுதியது.
    வில்லிபுத்தூரார் (வைஷ்ணவர்) தமிழ் இலக்கியமாக்கியது.
    வியாசர் விருந்து உரைநடை இராஜகோபாலாச்சாரியாரது.
    வியப்பு! கதைக்குள் கதை கூறுமமைப்புடையது.
    சகோதரர் பாண்டு, திருதராட்டினன் பிள்ளைகள்
    இடையிலான போர் மையக் காப்பியம்.
    அருச்சனனைப் போருக்கிணங்க வைக்கும் உபதேசமே
    உலகமகா கீதோபதேசமானது இக் காவியத்திலே.

    வேதத்தின் தத்துவங்கள், கருத்துகள் விளக்க
    வேதங்கள் நான்கெனும் தேவமொழியைத் தெளிவாக
    வேதவியாசர் ரிக், யசுர், சாமம்
    அதர்வணமாகத் தெளிவாகச் செப்பனிட்டார் நமக்காக.
    இவைகளின் பொருள் விளங்க மகாபாரதத்தை
    இயற்றினாராம். ஐந்தாம் வேதமெனவுமிதைக் கூறுவர்.
    ஆன்மா திரௌபதையாக, ஐந்து புலன்களை
    ஆன்மா மணந்து வாழுமுருவகக் கதையென்பார்.

    ஒரு இலட்சத்து இருபதாயிரம் சுலோகங்களாலானது.
    பதினெட்டு இலட்சம் சொற்கள் அமைந்தது.
    எழுபத்தி நாலாயிரம் பாடலடிகள் நிறைந்தது.
    கௌரவர் பாண்டவர் பிணக்கு குருசேத்திரப்போரானது.
    தர்மம் நீதி நேர்மையென்று கூறிக்கூறி
    சர்வமும் சூழ்ச்சிக்குள் சூழ்ச்சியாய் மகாபாரதம்.
    வர்மம் (வன்மம்) பழிக்குப்பழியே இங்குணர்ந்தேன்.
    மர்மமான போர்க் கவசங்கள் தந்திரங்கள்.

    பா ஆக்கம்
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    7-11-2014 and this link in my web:-
    http://kovaikkavi.wordpress.com/2014/11/02/341-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/

    ReplyDelete
    Replies
    1. அருமை சகோதரி பெருங்காவியத்தை உங்கள் கவிதைக்குள் அடக்கிவிட்டீர்கள் .நன்று

      Delete