Thursday 13 November 2014

கீதை-8

        பகவத் கீதை ஒரு சுருதி என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அது ஒரு ஸ்மிருதி என்பதும். அதன் பொருள் அவரவர் திறத்துக்கேற்ப விரித்துரைக்கப்படுகிறதேயின்றி, வரிகள் திருத்தி அமைக்கப்படவில்லை என்பது கீதையின் சிறப்பு.

          கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள் உள்ளன என்று முன்பே குறிப்பிட்டோம். முதல் ஆறு அத்தியாயங்கள் கர்மயோக தத்துவத்தைப் பேசுகிறது. நாம் எதை எண்ணுகிறோமோ அதைச் செய்கிறோம். உறுதி பெற்ற எண்ணம் சங்கற்பம. தீர்மானம் செயல் வடிவம் எடுக்கின்ற நிலை கர்மம். வாழ விரும்புவது சங்கற்பம், வாழ்வது கர்மம்.

         உணர்வுகளை கர்மத்தின் ஆதார சுருதி. உணர்வுகளில் இரண்டு வகை.

      நேர்மறை உணர்வு - விரும்பத்தக்கது  
      எதிர்மறை உணர்வு - விலக்கத்தக்கது.

           விருப்பம், நட்பு, ஆசை, பொறுமை போன்றவை நேர்மறை உணர்வுகள் ஆகும். வெறுப்பு, பகை, சினம், பொறாமை போன்றவை எதிர்மறை உணர்வுகள் ஆகும்.

          ஏழு முதல் பன்னிரண்டு அத்தியாயங்கள் வரை சொல்லப்பட்டது. பக்தியோகம்.

        அன்பின் இன்னொரு பரிமாணம் பக்தி. அது தூய்மையே வடிவாய்க் கொண்டது. பக்தியில் கெட்டது நல்லதாகும். நல்லது மிக நல்லதாகும்.

No comments:

Post a Comment