Monday 29 September 2014

எனக்கு விருதா...? (VERSATILE BLOGGER AWARD)

      


                எனக்கு விருதா...? எனக்கு விருதா...? சந்தோசத்திலே மிகப்பெரிய சந்தோஷம் கொடுப்பதில் தான் இருக்கிறது ஆனால் அன்பு , பாசம்,பரிசு, பாராட்டு இதெல்லாம் பெறுவதிலும்  சந்தோஷம் உண்டு அந்த வகையில்  எனக்கு அளித்த (VERSATILE BLOGGER AWARD) இந்த விருதை பெரும் மகிழ்ச்சியோடு ஏற்றுகொள்கிறேன்.



என்னைப் பற்றி


                நான் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள துவரங்குறிச்சி நான் பிறந்த ஊர் தாய் , தந்தை,சகோதரி,சகோதரன் என ஐவர் அடங்கியது எனது குடும்பம் அதில்  நான் கடைகுட்டிப் பெண். கல்வியில் இளங்கலை வணிகவியலில் பட்டம் பெற்று மேலும் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில்  மேலாண்மை இயலில் முதுநிலை பட்டம் பெற்ற (எம்.பி.ஏ ) நான் தற்போது ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிகிறேன். சிறு வயது முதல் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் உண்டும் அதனால் எழுதும் ஆர்வமும் ஒட்டிக்கொண்டது.

பூந்தோட்டம்

                 
                பூந்தோட்டம் பார்க்க அழகானது ரசிக்க அழகனாது நம் மனதை சந்தோஷப்படுத்தக் கூடியது. ஆனால் இன்று எத்தனை இல்லங்கள் பூந்தோட்டம்  வைத்து இருக்கிறது? பூந்தோட்டம் வேண்டாம் எத்தனை பூச்செடிகள் இருக்கிறது? சிலர் வீட்டிற்கு போகிறோம் வீட்டிற்கு வெளியே அழகான பூந்தோட்டத்தை காண்கிறோம் ரசிக்கிறோம் அதன் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொள்கிறோம். பூந்தோட்டம் போலவே அவர் வீட்டையும் வைத்திருப்பார் என்று நம்புகிறோம் அவர் வீடு மட்டுமல்ல அந்த பூந்தோட்டம் போலவே அவர் மனதும் இருக்கிறது என்று காண்கிறோம்.



                    சமையல் எப்படி ஒரு கலையோ அதே போல பூந்தோட்டம் வைப்பதும் ஒரு கலைதான். நம் மனது அமைதி இழந்து அவதிப்படும் வேளைகளில் அதன் அருகே செல்லுங்கள் உங்கள் மனது  லேசாகி விடும். 2011 - ல் அண்டை நாட்டில் இருந்து என் நண்பி ஒருவர் வந்தார். வந்த அன்று  ஒரு செடியை நட்டேன் அது மூன்று வருடத்திற்குப் பிறகு அதே மாதம் அதே நாளில் முதல் முறையாக பூத்திருக்கிறது. அவர் இந்த முறை வரவில்லை ஆனால் இந்த செடியை பார்க்கும் போது அவரே நேரில் வந்து சிரிப்பது போன்று தோண்றுகிறது. நாம் வளர்க்கின்ற செடியும் ஒரு குழந்தை போன்றுதான் அதற்கு நீர் ஊற்றினால் கண்ணு குளர்ச்சியை தந்து மகிழ்ச்சியையும் தருகிறது.

இந்த செடி  என் நண்பி இந்தியா வந்த போது வைத்தது

             வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று அரசாங்கம் சொல்கிறது அதை ஏன் நாம் ஒரு ரசனையோடு செய்யக்கூடாது. வெயில் காலங்களில் வெட்கையை தனிக்க அழகான பூந்தோட்டம் அமையுங்களேன் அடுத்தவர் வீட்டில் இருக்கும் பூந்தோட்டத்தைப் பார்த்து ரசிக்கும் நாம் ஏன் நம் வீட்டில் அதை வளர்க்க கூடாது நம் வீட்டையும் பார்த்து நாலு பேர் பார்த்து ரசித்தால் நமக்கு சந்தோஷம் தானே!


                அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது ஆனால் மற்றவர்கள் தயங்காமல் செய்யலாமே இது எனக்கு வராது, எனக்கு விருப்பமில்லை, ஆர்வமில்லை என்று சொல்வதெல்லாம் சோம்பேறிகளின் வார்த்தை அவர்கள்தான் இது போன்ற வார்த்தைகளை சொல்வார்கள் இதற்கு என்று நீங்கள் நேரம் ஒதுக்க தேவையில்லை காலை எழுந்தவுடன் பல் விளக்கும் நேரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் நீங்கள்  அங்கே நின்றாலே உங்கள் மனம் புத்துணர்ச்சி பெறும்.




               நீங்கள் அந்த செடிகளை வளர்ப்பதன் மூலம் மண் அரிப்பை தடை செய்கிறீர்கள் புழு, பூச்சி, வண்டு, வண்ணத்து பூச்சி, சிட்டுக்குருவி ஆகியவைகளுக்கு உணவளக்கிறீர்கள் உயிர் கொடுக்கிறீர்கள். இது உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் ஒரு நல்ல காரியம். வாருங்கள் மரம், செடி, கொடிகளை வளர்ப்போம் மனித நேயத்தை காப்போம்.

Thursday 25 September 2014

தஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - தேவைக்கேற்ப
மல்லிதூள் - தேவைக்கேற்ப
தேங்காய் மூடி - 1/2 மூடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 3 பல்
தக்காளி - 2
உப்பு - தேவைக்கேற்ப
வெந்தயம் - 1 ஸ்பூன்
கறிப்வேப்பில்லை - சிறிதளவு

Wednesday 24 September 2014

மருத்துவம் / உங்களுக்கு சர்க்கரை நோயா இனி கவலையை விடுங்க

                 இன்றைய காலக்கட்டத்தில் தீர்க்க முடியாத வியாதியாக சர்க்கரை நோய் இருக்கிறது. டாக்டர் கூட சொல்வதுண்டு சர்க்கரை நோய்க்கு நம் உயிர் உள்ளவரை மாத்திரை சாப்பிட வேண்டுமென்று ஆனால் இப்போது நான் சொல்லும் மருந்தை சாப்பிட்டால் நீங்கள் சர்க்கரை நோயை அடியோடு விரட்டி விடலாம். எப்படி தெரியுமா?

முரண்

வந்தால் என்னோடு
பேச வேண்டும் என்பதற்காக
நீ வருவது இல்லை..!

வந்தாலும் என்னோடு
பேச மாட்டாய் என்பதற்காக
நான் வருவது இல்லை..!

அப்படியே வந்தாலும்
நீ முதலில் பேசுவாய அல்லது
நான் முதலில் பேசுவதா என்ற
தயக்கத்திலே கழிகிறது நாட்கள்..!

நீ வராத நாட்களில்
உனக்கு என்னாச்சோ என்று நானும்
எனக்கு என்னாச்சோ என்று நீயும்
நினைக்கத் தவறியதே இல்லை!

உனக்கும் எனக்கும்
எதனால் விழுந்தது இந்த திரை?
எதற்கு இந்த கண்ணாம்பூச்சி?

முரண்பட்ட இதயங்களால்
முடங்கி கிடக்கிறது
பனித்துளி பாசங்கள்..!

Sunday 21 September 2014

பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதை தெரியுமா உங்களுக்கு?



           ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆவணி மாதம் பிள்ளையார் சதுர்த்தி துவங்கி அந்த ஆண்டு இறுதியில் ராமநவமிக்கு பின் வரும் அனுமந்த ஜெயந்தி வரை எல்லா தெய்வங்களையும் பூஜை செய்து திருவிழா எடுத்து வழிபடுகிறோம். வழிபாடுகள் பிள்ளையாரில் தொடங்கி அனுமாரில் முடிவதைதான் 'பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை' என்று சுருக்கி சொல்கிறார்கள்.

#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி




            தமிழ் மொழி மீது நாம் பற்று வைப்பது இயற்கை நியதியாகும். அதற்கு மேலே அந்த மொழியை ஒப்பிட்டுப் பார்த்தாலும், தமிழ் ஒரு செம்மொழி என்பது தெரிகிறது. அந்த மொழி மீது வைக்கப்படுகின்றன பற்றின் காரணமாக அந்த மொழி எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற வேண்டுமென்று விரும்புகிறோம். ஏற்றத்திற்கு தடையாக ஏதேனும் வருமானால் நம்மையும் அறியாமல் உள்ளம் கொதிப்படைகிறது. 

           கண்ணுக்கு மையிடுவது போல, பிறமொழிகளைப் பயன்படுத்த வேண்டும். மை அதிகமானால் கண் எப்படிக் கரித்துவிடுகிறதோ, அதுபோல பிறமொழிகள் அதிகம் கலப்பதும் ஆபத்தான நிலையை உண்டாக்கும்.

மதம் மாற்றம்

இன்றைய கால கட்டத்தில் மதம் மாற்றம் என்பது தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. பெரும்பாலும் இந்துக்களே மதம் மாறுகின்றனர் இதற்கு என்ன காரணம்? ஒரு இஸ்லாமியரோ அல்லது ஒரு கிறிஸ்தவரோ இந்து மதங்களுக்கு மாறுவதில்லை ஆனால் இன்று இந்துங்கள் முஸ்லீமாக, கிறிஸ்துவாக மாறிக்கொண்டு இருக்கின்றார்கள் இந்த மதமாற்றங்கள் எதனால் ஏற்படுகிறது? காதல் திருமணங்களால அல்லது இந்துதுவக் கொள்கை பிடிக்காததினாலா? அல்லது இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாததினால? இது என்னவோ நூதனமுறையாக இருக்கிறது. 

மதம் மாறுவது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் இருந்த போதிலும் இது பற்றி இதுவரை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது என்னவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டியதாக உள்ளது. பிறந்த மதத்தை விட்டு வேறு மதத்திற்கு ஏன் மாறுகிறார்கள் என்று இதுரை யாரும் குறிப்பிடவில்லை ஆச்சரியமாகதான் இருக்கிறது.

அறிவிப்பாளர்களின் அஷ்டவதானி நாகபூஷணி

       


            அறிவிப்புத் துறையின் அஷ்டவதானி கவிதாயினி நாகபூஷணி அவர்கள் தான் இவரை இப்படிதான் சொல்ல வேண்டும் சிலருக்கு கவிதை எழுத தெரியும் ஆனால் பாட தெரியாது சிலருக்கு பாடத் தெரியும் ஆனால் ஆடத் தெரியாது. சிலருக்கு கதை, கட்டுரை எழுது தெரியும் ஆனால் அதை வாசிக்கத் தெரியாது.
                                     


             ஆனால், இவருக்கு கவிதை,கதை, கட்டுரை, ஆடல், பாடல் எல்லாமே கை வந்த கலை அப்ப இவர் அஷ்டவதானி தானே..! சரஸ்வதி இவர் நாக்கிலே தாண்டவம் ஆடுகிறாள் அடக்கமும் அழகு இவரிடத்தில் குடிக் கொண்டிருக்கிறது. இவர் அறிவிப்பாளராக வரவில்லை எனில் ஒரு பாடகியாக வர வேண்டியவர் இலங்கை வானொலி இந்த இலக்கிய குயிலை தன்னக்கத்தே தக்க வைத்துக்கொண்டது.


           இவர் நாவல்நகர் கதிரேஷன் கல்லூரயில் உயர்தரம் வரை கற்று யாழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்று கொழும்பு பல்கழகத்தில் இதழியலில் டிப்ளோமாவையும் முடித்துவிட்டு தற்போது இலங்கை வானொலி தென்றலில் நிரந்தர அறிவிப்பாளராகவும், 2000 -ல்  வசந்தம் தொலைக்காட்சியில் "தூவானம்" நிகழ்ச்சியும் மற்றும் 2013 -ல் இருந்து முகமூடி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.


Friday 19 September 2014

ஏதோ நினைவுகள்

நான் தூங்கி எழும்போதெல்லாம்
என் கைபேசியில் வரும் குறுஞ்செய்தி 
உன்னை நினைவுப்படுத்திவிட்டு போகிறது..!

நான் சாப்பிட அமரும் போதெல்லாம்
உனக்குப் பிடித்த உணவு உன்னை
நினைவுப்படுத்தி விட்டு போகிறது..!

நான் உறங்கச் செல்லும் போதெல்லாம்
தூங்குவதற்கு கெஞ்சும் உன் கண்கள்
உன்னை நினைவுப்படுத்திவிட்டு போகிறது..!

உன்னை மறக்க வேண்டுமென்று
நினைக்கும் போதெல்லாம்
வானொலியில் ஒலிக்கும் பாடல்(...) 
உன்னை நினைவுப்படுத்திவிட்டு போகிறது..!

Thursday 18 September 2014

கோபுரத்தின் சிறப்பு

            கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஆகும். கோயில் சென்று வழிபட முடியாதவர்கள் தூரத்தே நின்று கூட கோபுர வழிபாடு செய்யலாம். இது கர்ப்ப கிரஹத்தில் இருக்கும் இறைவனை வழிபட்டதற்கு சமமாகும். கோபுரத்தை ஸ்தூல லிங்கமாகவும் இறைவனின் பாதங்களாகவும் பாவித்து வணங்கிக் கோயிலுக்குள் புக வேண்டும். கோயில்கள் நமது உடம்பின் வடிவத்திலேயே அமைக்கப் பட்டுள்ளது இதனை க்ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம் என்பர்.
இதனையே திருமூலர்

                         உள்ளம் பெருங்கோயில் மானுடம்பாலயம்
                         வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்
                         தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
                         கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே
                                                                                                       எனக் கூறுகிறார்.
            தினசரி ஆலய தரிசனம் செய்வோர் வாயில் இறைவன் திருநாமம். நெஞ்சில் அந்த இறைவன் நினைவை நிறுத்தி கண்களை மூடி தியானம் செய்வது மிகச்சிறப்பு. நமது ஆலயங்களில் காணப்படும் அமைதி, மனதிற்குள் ஊடுருவும் தெய்வ சக்தியை வெளிநாட்டவரே வியந்து போற்றுகின்றனர்.

தஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி?

                               இறால் தொக்கு 

தேவையான பொருட்கள்

இறால் - 1/2 கிலோ
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 1 (முழு)
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1 பெரியது
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பில்லை - சிறிதளவு
எண்ணெய் - 1/2 கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் -  சிறிதளவு

Wednesday 17 September 2014

தஞ்சாவூர் சமையல் / கொத்தவரங்காய் பொறியல் செய்வது எப்படி?

                     கொத்தவரங்காய் பொறியல் 

தேவையான பொருட்கள் 

கொத்தவரங்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சைமிளகாய்(சிவப்பு) - 2
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் துறுவல் - சிறிதளவு

ஏமாற்றம்

நீ வரும் இடங்களுக்கெல்லாம்
நான் வந்து பார்த்துவிட்டு
ஏமாற்றத்தோடு திரும்புகிறேன்..!
நீ தேர்தலுக்கு வரும்
அரசியல் வாதிபோல்
எப்போதாவது வந்து
கையசைத்து விட்டு போகிறாய்
உனக்கிது வேடிக்கையகிபோனது
எனக்கிது வாடிக்கையகிபோனது..!

ஆண்டவனை ஆலயம் சென்று வழிபடுவது ஏன்?

         ஆண்டவன் எங்கும் நிறைந்து வியாபித்து இருக்கும் போது ஆலயத்திற்கு சென்று ஆண்டவனை வழிபடுவது ஏன் என்கிற எண்ணமும், ஏதாவது காரியம் நிறைவேற தெய்வத்தை வேண்டிக்கொள்ள வேண்டியது ஏன் என்கிற சந்தேகமும் ஏற்படுவதுண்டு. பசுவின் பால் எங்கே இருக்கிறது? என்று கேட்டால் என்ன சொல்வோம் பசுவின் மடியில் உள்ளது அதன் காம்பைப் பிடித்துக் கறந்தால் பால் கிடைக்கும் என்று கூறுவோம்.

        ஆனால், பசுவின் மடியில் மட்டுமே பால் உற்பத்தியாகிறது என்று கூறினால் ஒப்புக்கொள்வோமா? இல்லையே? அதன் உடல் முழுவதும் அந்தச் சத்து பரவி இருக்கிறது என்று திருப்பிச் சொல்வோம். அதற்காக பசுவின் காதைப் பிடித்து இழுத்தால் பால் கிடைக்குமா? வாலைப் பிடித்து இழுத்தால் பால் கிடைக்குமா? அது காலால் உதைக்கும்.

        பசுவின் பால் என்கிற சத்து அதன் உடம்பு முழுவதும் நிறைந்திருந்தாலும், பால் கிடைக்க வேண்டும் என்றால் அதன் மடியைப் பிடித்துக் கறந்தால்தான் கிடைக்கும் என்கிற உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியதாகிறது. அதனால் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும் அவரைச் சரியான முறையில் அணுகிப் பிராத்தனை செய்து கொள்ள தெய்வ சாந்நித்தியம் கொண்ட ஆலயம் என்கிற ஓரிடத்திற்குப் போயாக வேண்டி இருக்கிறது.

          நமக்கு ஒரு அலுவலகத்தில் காரியம் ஆக வேண்டியிருந்தால் ஒவ்வொருவரையும் கவனித்த பிறகுதான் தலைமை அதிகாரியை சந்தித்து தன் வேலையை சாதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கோயிலிலும் இப்படிதான் நடக்கிறது. ஆண்டவன் எல்லா இடங்களிலும் நிறைந்து இருந்தாலும் குறிப்பிட்ட வேண்டுகோள்  நிறைவேறுவதற்குக் குறிப்பிட்ட சந்திதிக்குப் போக வேண்டியதாக இருக்கிறது. குறிப்பிட்ட தெய்வத்திடம் உங்கள் தேவைக்கேற்ப பிரார்த்தனை செய்து அருளைப் பெற வேண்டி இருக்கிறது. இவை ஆன்மிக ஒளிவிளக்கு நூலிருந்து.

என் சமையலறையில் / மீன் வறுவல் செய்வது எப்படி?

                                     மீன் வறுவல் 

தேவையான பொருட்கள் 

 மீன் - 1/2 கிலோ
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 3 பல்
சின்ன வெங்காயம்  - 4 ,5
மிளகாய்த்தூள் - 4 ஸ்பூன்
கடலை மாவு - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை அல்லது தக்காளி ஜுஸ் தேவைக்கேற்ப
கேசரி பவுடர் தேவைக்கேற்ப
எண்ணெய் - 200

என் சமையலறையில் / பாதம் அல்வா செய்வது எப்படி?

            சமையல் ஒரு அழகான கலை அது சிலருக்கு மட்டும் கைவந்த கலை எல்லோரும் சமைக்கலாம் ஆனால் ஒரு சிலர் மட்டுமே ருசியாக சமைப்பர். ஒரு ரசத்திற்கான பொருட்களை கொடுத்து மூன்று பேரிடம் வைக்கச் சொன்னால் மணம் ஒன்றாக இருக்கும் ஆனால் ருசி வேறாக இருக்கும.

           இந்த பக்கத்தில் முதல் முறையாக சமையல் பற்றி பதிவு செய்ய போகிறேன் அதை ஒரு இனிப்போடு தொடங்கலாம். சரி வாங்க பாதம் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 பாதம் அல்வா

தேவையான பொருட்கள் 

பாதம் - கால் கிலோ
பால் - ஒரு டம்ளர்
நெய் - 200 கிராம்
சர்க்கரை - கால் கிலோ
ஏலக்காய் - சிறிதளவு

Tuesday 16 September 2014

இந்துமத தத்துவத்தை உணர்த்தும் நமது உபநிடதங்கள்

             இந்துமத உபநிடத நூல்கள் வாழ்க்கை முறையை விஞ்ஞான ரீதியாக நமக்குக் கற்று கொடுக்கின்றன. பௌதிக பாடத்தில் ஒவ்வொரு துறையைப் பற்றி ஒவ்வொரு விஞ்ஞானி ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டிருப்பதைப் போல இதிலும் பல்வேறு ஞானிகள் உண்மைகளைத் தெளிவாக்கி இருக்கிறார்கள். அவற்றில் அந்த ஞானிகள் மக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கமும் சொல்லியிருக்கின்றனர்.

            உபநிடதங்கள் மாய மந்திரத்தின் மூலம் மருந்து கொடுப்பதில்லை. எந்த முனிவரும் தான் சொன்னதை நம்பியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. ஒவ்வொரு நிலையிலும் தெரிந்த ஒன்றைச் சொல்ல ஆரம்பித்து பிறகு படிப்படியாகத்தான் தெரியாத ஒன்றுக்குப்போய் விளக்கம் சொல்லியிருக்கின்றனர். கேள்வி கேட்கும் மக்கள் தன்னை எப்படி பக்குவம் படுத்திக்கொள்வது என்பதையும் விளக்கியுள்ளனர்.

Monday 15 September 2014

கவர்ச்சி சினிமா

           

         சினிமா இன்று வெறும் கவர்ச்சியை மட்டும் வைத்து படத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் கவர்ச்சி நிறைந்த படங்கள் படு தோல்வி அடைந்திருக்கிறது என்று ஏன் இந்த இயக்குநர்களுக்கு புரியாமல் போனது? கவர்ச்சி இல்லாத படங்கள் தான் இன்று வெற்றியடைந்துள்ளது. உதாரணத்திற்கு சுப்ரமணியபுரம், சாட்டை, கும்கி, வழக்கு எண் 18, அங்காடி தெரு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மைனா, தங்க மீன்கள், ராஜா ராணி, தெய்வ திருமகள், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஹரிதாஸ் போன்ற படங்கள் பெரும் வெற்றியை பெற்றது. பாண்டியராஜ்,சமுத்திரக்கனி, சசிகுமார், சாலமன்,அட்லி போன்ற இயக்குநர்கள் ரசிகர்களின் மனதை புரிந்து படம் எடுக்கிறார்கள் வெற்றி பெறுகிறார்கள் இவர்களை இந்த நேரத்தில் பாராட்ட வேண்டும்.

               சரி, ரசிகர்கள் கவர்ச்சியைதான் விரும்புகிறார்கள் என்று எதை வைத்து முடிவு செய்கிறார்கள் நடிகைக்கு அரைகுறை ஆடை உடுத்தி ஏன் ஆட வைக்கிறீர்கள்? மேற்சொன்ன படங்களில் கவர்ச்சியான பாடல் காட்சி இல்லை அந்த படங்கள் வெற்றியடைய வில்லையா? கவர்ச்சி இல்லாத படங்கள், கவர்ச்சி இல்லாத பாடல்கள் தான் எல்லோருக்கும் பிடிக்கிறது இந்த மாதிரியான படங்கள் தான் மாபெரும் வெற்றியை தந்தது. நீங்கள் கவர்ச்சியான படங்களை எடுத்துவிட்டு பிறகு ஏன் படம் ஓடவில்லை என்று வருந்துகிறிர்கள் இந்த ஏமாற்றம் உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சார்ந்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும்தான்.

               ரசிகர்கள் கேட்டார்களா எங்களுக்கு கவர்ச்சியான காட்சிகள் வேண்டும் என்று அதற்கு என்றுதான் தனி உலகமே இருக்கிறேதே வேண்டுமென்றால் அதை பார்த்துவிட்டு போகிறார்கள் தமிழ் சினிமாவில் ஏன் ஆபாசத்தை புகுத்துகிறீர்கள்? ஒரு தந்தை தன் மகனோடு அமர்ந்து படம் பார்க்க முடியவில்லை, ஒரு தாய் தன் மகளோடு அமர்ந்து படம் பார்க்க முடியவில்லை, ஒரு அண்ணன் தன் தங்கையோடு அமர்ந்து படம் பார்க்க முடியவில்லை ஏன் சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு கூட படம் பார்க்க முடியவில்லை அத்தனை கூச்சமாக இருக்கிறது குடும்பத்தோடு அமர்ந்து பார்த்தால் பாடல் காட்சிகளில் நெளிய வேண்டியிருக்கிறது அத்தனை கேவலமாக இருக்கிறது.

              இயக்குநர்களே நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் கவர்ச்சியை எந்த ரசிகரும் விரும்பவில்லை அதற்கு உங்கள் தோல்வி படங்களே உங்களுக்கு உணர்த்தி விட்டது அப்படி இருந்தும் ஏன் கவர்ச்சியை நம்பி படம் எடுக்குறீர்கள்? என்று ஒரு நல்ல கதையோட எல்லோரும் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படி படம் எடுக்குறீர்களோ அன்று வெற்றிகள் உங்களைத் தேடிவரும்.

Friday 12 September 2014

என் ஞாபகம் நீ





என் கண்களாக
நீயிருந்தாய் அதனால்தான்
கண்ணீராக கரைந்து போனாய..?

என் கனவாக
நீயிருந்தாய் அதனால்தான்
கலைந்து போனாய..?

என் நிலவாக
நீயிருந்தாய் அதனால்தான்
தேய்ந்து போனாய..?

என் மலராக 
நீயிருந்தாய் அதனால்தான்
உதிர்ந்து போனாய..?

உனக்கு  தெரியுமா?
நீ என்னை மறந்து போனதால்
நான் தொலைந்து போனேன்..!





பரிமாற்றம்

சின்ன சின்ன பரிமாற்றங்கள்
அன்பை வெளிப்படுத்தும்
நமக்கான நட்பை பலபடுத்தும் - ஆனால்
நீ மட்டும் எப்படி எதுவுமின்றி
என்னுள்  நுழைந்தாய்..?

 


Thursday 11 September 2014

யாரைத்தான் நம்புவதோ?



மன்னை நம்பி மரம் இருக்கிறது
மரத்தை நம்பி கிளை இருக்கிறது
கிளையை நம்பி இலை இருக்கிறது
இலையை நம்பி பூ இருக்கிறது
பூவை நம்பி  காய் இருக்கிறது
காயையை நம்பி கனி இருக்கிறது
கனியை  நம்பி பல உயிர் இருக்கிறது - ஆனால்
இந்த உயிர்  யாரை நம்பி இருக்கிறது..?

கடலை நம்பி சிப்பி இருக்கிறது
சிப்பியை நம்பி முத்து இருக்கிறது
முத்தை நம்பி வணிகம் இருக்கிறது
வணிகத்தை நம்பி மனித ஆசை இருக்கிறது - ஆனால்
இந்த உயிர்  யாரை நம்பி இருக்கிறது..?

வானத்தை நம்பி சூரியன் இருக்கிறது
சூரியனை நம்பி நிலவு இருக்கிறது
நிலவை நம்பி நட்சத்திரம் இருக்கிறது
நட்சத்திரத்தை நம்பி  சாஸ்த்திரம் இருக்கிறது
சாஸ்திரத்தை நம்பி ஜோதிடம் இருக்கிறது
ஜோதிடத்தை நம்பி மானுடம் இருக்கிறது - ஆனால்
இந்த உயிர்  யாரை நம்பி இருக்கிறது..?

மலையை நம்பி அருவி இருக்கிறது
அருவியை நம்பி நதி இருக்கிறது
நதியை நம்பி ஆறு இருக்கிறது
ஆற்றை நம்பி விவசாயம் இருக்கிறது
விவசாயத்தை நம்பி உழவு இருக்கிறது
உழவை நம்பி உணவு இருக்கிறது
உணவை நம்பி உயிர் இருக்கிறது - ஆனால்
இந்த உயிர்  யாரை நம்பி இருக்கிறது..?










Wednesday 10 September 2014

ஆன்மிகம் / சிவன் கோவில் வழிபாடு


           
                சிவன் கோவிலுக்கு நாம் அடிக்கடி செல்கிறோம். சிலர் சிவமூர்த்தியையும், கோவிலை சுற்றி சின்ன சின்ன ஆலயங்களில் அமைந்துள்ள தெய்வங்களையும் வணங்குவது வழக்கம். சிலர் சிவமூர்த்தியை மட்டும் வணங்கி விட்டு திருபிவிடுவர் அப்படி அல்லாமல் ஏனைய அனைத்து தெய்வங்களையும் வழிபடவேணடும். தினசரி பூஜை, புனஷ்காரம், கற்பூர ஆராதனை என்று வழிபாடுகள் இருப்பதால் சிறிய கோவில் என்றாலும் தெய்வசக்தி உச்சச்தில் இருக்கும். சிவபெருமான் கோவில்களில் கர்ப்ப கிரகத்தின் தெற்கு புறமாய் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியை சிவனுக்கு அடுத்தபடியாக வழிபடவேண்டும்.

             அதன்பின் வெளியே உள்ள தெய்வங்களை  வணங்குதல் வேண்டும் நவஹிரகங்களை ஒன்பது முறை சுற்றி வரவேண்டும். நவஹிரக வழிபாடு முடிந்தவுடன் ஸ்ரீ சண்டகேஷ்வரை வணங்க வேண்டும் வழிபாடுகள் முடிந்தபின் உணவருந்த செல்லுதல் நல்லது.

Tuesday 9 September 2014

மருத்துவம் / நன்றாகப் படிக்க, மூளை பலம் அடைய ஞாபக சக்தி உண்டாக

            வல்லாரை சமூலத்தை கொண்டு வந்து நிழலில் காயவைத்து அதை வஸ்திர காயம் செய்து வைத்துக்கொண்டு சூடான பாலில் காலை, மாலை,சாப்பிட்டு வந்தால் நினைவு ஆற்றலை பெறலாம் மூளை சக்தி அடையும் வல்லாரையை அடிக்கடி சமைத்து  வீட்டில் அனைவரும் கீரை உபயோகிபதுபோல உபயோகிக்கலாம் பத்தியம் இல்லை பள்ளயில் படிக்கும் மாணவர்கள் இந்த வல்லாரைக் கீரையை அடிக்கடி உண்டால் மிகவும் நல்லது.

          தினமும் காலையில் பாதாம் பருப்பு 10 எடுத்து பால்விட்டு அரைத்து 1/2 லிட்டர் பாலில் வேக வைத்து  அத்துடன் 10 கிராம் காய்ந்த  திராட்சை சேர்த்து நன்றாக சுண்ட வைத்து அதில் தேவையான அளவு கற்கண்டு கூட்டி சாப்பிட்டு வந்தால் மூளை    பலம் அடையும். திரட்சைக்கும், பாதாம் பருப்புக்கும் மூளையைப் பலபடுத்தும் சக்தி இருப்பதுடன் மூளை நரம்புகளும் நல்ல சக்தி பெரும் ஞாபக சக்தி மிகுதியாகும் உஷ்ணம் இருக்காது.

வீட்டு பூஜையறை வழிபாடு /ஆன்மிகம்

               நமது ஒவ்வொருவரின் வீட்டிலும் பூஜை அறை எனத் தனியாக ஒன்றை ஒதிக்கி வைத்திருக்க வேண்டும்.  சுவாமி படங்கள் சின்ன சின்ன விக்ரஹங்கள் நிவேதன பொருட்கள் பூஜை சாமான்கள் என்று சிறிய கோவில் அமைப்புடன் வைத்து தினசரி பூஜை வழிபாடு செய்து வந்தால் இறைவன் நம் இல்லத்தில் குடியிருபது போன்ற உணர்வும்சக்தியும் தன்னம்பிக்கையும் ஏற்படும் முறையான வழிபாடு செய்யும் போது தெய்வசக்தி நம்முடனே இருக்கிறது என வேதங்கள் குறிபிடுகின்றன. 

Monday 8 September 2014

தாலாட்டு

 வாழ்வின் தொடர் ஓட்டத்திற்கு
இடையில் என்னை ஆசுவாசபடுத்தி
இளைப்பாற வைத்தது நட்பு - அந்த
தோழி தன் மடியில் நினைவிழுந்த
சிறு குழந்தையாய் உறங்கும்போது
நான் அவளுக்கு தாயானேன்
தாலாட்டு பாட - என் உயிரே...!
என்னை பிரிந்து விடாதே
நீயில்லா உலகத்தில் எனக்கு
நிம்மதி இருக்காது...!

ஆலயதரிசனம்

              ஆலயதரிசனம் நம் மனத்திற்கு நிம்மதியையும் ஆறுதலையும் தரக்கூடியது கோவில் எத்தனை தொலைவில் இருந்தாலும் மக்கள்   தேடி தேடி செல்கின்றனர்   ஆனால் அவர்களுக்கு  திருப்தி கிடைகிறதா என்று கேட்டல்  இல்லை என்றுதான் சொல்லவேண்டும் சிறு சிறு ஆலயங்களில்கூட பக்கதர்கள் வாங்கி செல்லும் மாலை,பூ, பூஜைக்குரிய பொருட்கள் சாமிக்கு சாத்தப்படுகிறது ஆனால் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் நாம் வாங்கி செல்லும் பொருட்களை முறையாக சேர்ப்பது இல்லை .

              நமக்கு நேராகவே தூக்கி வீசுகின்றனர் அது மனதிற்கு கஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கிறது ஏன் அவ்வாறு செய்கின்றனர் வருகின்ற பக்தர்களுக்கே அதை பிரசாதமாக கொடுக்கலாமே அவர்களும் சந்தோசமாக  வாங்கி செல்வார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் நூறு ரூபாய் கொடுப்பவர்களுக்கு தான் கழுத்தில் மாலை போடுகிறார்கள் பத்து ரூபாய் கொடுத்தால்  பூ தருகிறார்கள் கடவுளை காண்பதற்கும் காசு பிரசாதம் வாங்குவதற்கும் காசு இந்த கடவுள் கூட காட்சி  பொருளாகத்தான் இருக்கிறார்.


                 சிவ தலங்களில் விஷேசமாக கொண்டாடுவது பிரதோஷம் அதற்கு வரும் பக்தர்கள் உபவாசம் இருந்துதான் வருகிறார்கள் அவர்களுக்கு பொங்கல் புளியோதரை பிரசாதமாக வழங்கலாம் அதை விடுத்து காசுக்கு விற்பனை செய்கின்றனர். அரசு அன்னதானத்திற்கு என்று நிதி ஒதுக்குகிறது அதில்  தாராளமாக செய்யலாமே பக்தர்கள் மனநிறைவோடு செல்வார்கள்
சிறு ஆலயங்கள் இதை பின் பற்றுகிறார்கள் பிரசித்தி பெற்ற ஆலயங்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

Sunday 7 September 2014

¤ சுமைகள் ¤


              சுரேஷ் அவசர அவசரமாக ஆபிஸ்க்கு கிளம்பிகொண்டிருந்தான் ஒரு தனியார் கம்பெனி ஒன்றில் மேனேஜிங் டைரக்டர் உத்தியோகம் பார்க்கிறான்.

             "கவிதா... கவிதா... ஆபிஸ்க்கு டைம் ஆச்சு லன்ஜ்பாக்ஸ் எடுத்துட்டுவா.."

              "ஏன்ங்க இப்படி கத்துறீங்க இதோ வந்துட்டேன் அப்பப்பா அவனை கூட ஸ்கூலுக்கு அனுப்பிட்டேன் உங்களை அனுப்புறதுக்குள்ள போதும்போதும்ன்னு இருக்கு.."

             "என்ன அவன் ஒழுங்கா படிக்கிறானா... மார்க் ரொம்ப குறைஞ்சு இருக்கு... "

             "ஆமாங்க அவன் புக் எடுக்குறதே இல்ல சொன்னா எங்க கேக்குறான்"

             "சரிசரி நான் அவன்கிட்ட பேசுறேன் ஆங்.. அப்பாவுக்கு உடம்பு சரி இல்லயாம்    ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போகச் சொன்னார் அவர் சொல்லி ஒருவாரமாச்சு எனக்கும் நேரம் கிடைக்கல சாய்திரம் அழைச்சிட்டு போறேன்னு சொல்லு"

            "ஏங்க... நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க உங்க அப்பாவ ஓல்டு ஏஜ் ஹோம்ல சேர்த்துரலாங்க என்னால வச்சுகிட்டு சமாளிக்க முடியல சளி தொல்லை வேற.."

           "என்ன கவிதா சொல்ற நீ என்னை பெத்த பாவத்த தவிர வேற என்ன பாவம் செஞ்சாங்க இங்கேயே ஒரு மூலையில இருந்துட்டு போகட்டுமே..."

          "இங்க பாருங்க உங்ககிட்ட எத்தனையோ தடவை சொல்லியாச்சு நீங்க கேக்குறதா இல்ல இனிமே என்னால பொறுமையா இருக்க முடியாது இங்க சும்மாதானே இருக்காங்க அத அங்க போய் இருக்கட்டுமே அவங்களும் நல்லா கவனிச்சுப்பாங்க மாசம் மாசம் பணம் அனுப்பிறளாம்..."

          "சரி சரி சாய்ந்திரம் ஒரு முடிவடு வர்றேன்..."

          மறுநாள் மனைவியின் ஆலோசனைப்படி அப்பாவை ஓல்டு ஏஜ் ஹோம்ல சேர்த்துவிட்டான்.

          வருடங்கள் நகர்ந்தன மகன் அருண் ஒருநாள் திடீரென்று ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து நின்றான் சுரேஷ்க்கும் கவிதாவுக்கும் அதிர்ச்சி

            "என்னப்பா... இப்படி செஞ்சிட்ட பெத்த எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல..."

           "என்னப்பா... சொல்றீங்க யார்கிட்ட சம்மதம் கேட்கனும் எனக்கு அவளை
பிடிச்சுருக்கு அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு நாங்க கல்யாணம்
பண்ணிக்கிட்டோம்"

          "பெத்தவங்ககிட்ட சம்மதம் வாங்குறதெல்லாம் அந்த காலம் இது டொண்டி பர்ஸ்டு செஞ்சுரி புரிஞ்சுகோங்க என்றபடி புது மனைவியை அழைத்துச் சென்றான் அருண்.

            சில வருடங்களுக்கு பிறகு சுரேஷ்சும் கவிதாவும் அந்த ஓல்டு ஏஜ்  ஹோமில் சேர்க்கப்பட்டனர் சுரேஷ் அப்பாவை போய் பார்த்தான் அவர் ரொம்ப மெலிந்து காணப்பட்டார் அப்பா.. அப்பா.. மெல்ல அழைத்தான்.

             அவர் தட்டு தடுமாறி கண்ணாடி எடுத்து போட்டப்படி யாரு.. யாரு.. யாரு என்ன கூப்பிட்டது...? நான்தான்ப்பா சுரேஷ் வந்திருக்கேன் நல்லா இருக்குறீங்களாப்பா..."

             "வாப்பா.. சுரேஷ் நல்லா இருக்குறீயா உன்னை கண்ணால பார்க்க முடியலங்குற குறைய தவிர நான் நல்லா இருக்கேன் நீயும் தவறாம பணம் அனுப்புற இல்ல என்னை நல்லா கவனிச்சுகுறாங்கப்பா..." என்றார் சிறு நடுக்கத்தோடு

         "என்னை மன்னிச்சுருங்கப்பா உங்கள சுமையின்னு நினைச்சு எந்த ஹோம்ல விட்டேனோ அதே ஹோம்ல இப்ப நானும் உங்க மருகளும் வந்திருக்கோம் முதுமை என்பது எல்லாருக்கும் வரும்னு நினைக்காம இருந்துட்டோம் நான் செஞ்ச தவறுக்கு கடவுளே எங்களை தண்டிச்சுட்டார் என அப்பாவின் கால்களைக் கட்டிக்கொண்டு பெருங்குரலெடுத்து அழுதான் சுரேஷ்.

                    முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பது உண்மை

வறுமையின் நிறம் சிகப்பு

                  வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்கு பெண்கள் அனுப்பப்படுகிறார்கள் நல்ல சம்பளம் கிடைக்கும் நம் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரலாம் என்ற கனவோடு ஆகயா விமானத்தில் பறந்து செல்கிறார்கள். அநேக வீடுகளில் வீட்டு வேலை என்ற பெயரில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் சகித்து கொண்டவர்கள் சம்பாதிக்கிறார்கள் முடியாதவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

                   சில சபலபுத்தி கொண்ட பெண்கள் எப்படியும் சம்பாத்திக்கலாம் என்று வெளிநாட்டில் தவறான செயல்களில் சம்பாதித்து தன் குடும்பத்தை மேன்மை நிலைக்கு கொண்டு வருகிறார்கள் ஊரில் வந்து எப்படி சம்பாதித்தோம் என்று சொல்வதில்லை அதைக் கண்ட மற்ற பெண்கள் தானும் சென்று சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சிலந்தி வலையில் தானாக சிக்கி கொள்கின்றனர்.
    
                  வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண்களே அங்கே உங்களுக்கு என்ன நடக்கிறது என்று சொல்லிவிடுங்கள் அதைக் கேட்ட மற்ற நல்ல குடும்பத்து பெண்கள் செல்ல மாட்டார்கள் இது நீங்கள் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி. எப்படி வேண்டுமென்றாலும் சம்பாதிக்கலாம் என்ற பெண்களுக்கு இது பெரிய விஷயமில்லை ஆனால் இது தெரியாத நல்ல குடும்பத்து பெண்கள் தெரியாமல் சிக்கிக்கொள்வது பரிதாபத்துக்குரியது. வறுமையை போக்க ஆயிரம் வழி இருக்கிறது உடம்பை விற்றுதான் வறுமையை போக்க வேண்டும் என்பது இல்லை பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருக்கிறார்கள் என்பது உண்மை.

Friday 5 September 2014

பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பாரத பெண்கள்


                  இன்று எங்கு பார்த்தாலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது கோவில், கல்லூரி, பள்ளி, கார், பேருந்து,காடு, கரை, கம்மா, சந்து, பொந்து, இட்டு, இடுக்கு எல்லா இடங்களிலும் பாலியல் தொல்லை. இதற்கு என்ன காரணம்? சமூகமா? சமூக சார்ந்த சூழ்நிலையா? அந்த காலத்தில் பாஞ்சாலியை துரியோதணன் சேலையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தினான் என்பதற்காக மிகப்பெரிய பாரத
போர் நடந்தது லட்சக்கணக்கான வீரர்கள் போரில் மாண்டார்கள்.

               ஒரு பெண்ணின் மானத்திற்காக ஒரு மகாபாரதமே உருவானது அதுவே நமக்கு பாடமாக வைக்கப்பட்டது அப்படி இருந்து அதே பாரத தேசத்தில் பெண்கள் கற்பழிக்கப்படுக்கின்றனர் இதற்கு எந்த தண்டனையும் இன்றி காமூகர்கள் உல்லாசமாக வலம் வருகிறார்கள் அயல் நாட்டில் நவநாகரீக மக்கள் வாழ்க்கின்ற தேசத்தில் கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை விதிக்கிறது. ஆனால் 'கலாசாரத்திற்கு பேர் போன இந்தியாவில் கற்பழிப்பு குற்றத்திற்கு மன்னிப்பு மட்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது'

                சிலர் சொல்கிறார்கள் பாலியல் வன்முறைக்கு பெண்கள்தான் காரணம் அவர்கள் உடுத்தும் உடைதான் காரணம் என்று. சிறு குழந்தைகள் கற்பழிக்கப்படுகிறார்களே அந்த குழந்தையிடம் என்ன கவர்ச்சி இருக்கிறது? உடல் ரீதியான மாற்றங்கள் கூட ஏற்படாத குழந்தைகள் கற்பழிக்கப்படுகிறார்களே இதை என்னவென்று சொல்வது? சிறு
குழந்தை என்ன கவர்ச்சி உடை அணிந்தது? உடை காரணமென்று சொல்பவர்கள் ஒருவகையில் காமூகர்கள் தான் அவர்கள் உத்தமர்கள் இல்லை காமத்தால் அம்மாவிற்கும், அக்காவிற்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுமா?

                மற்ற நாடுகளை போல் நம் இந்தியாவிலும் கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் அப்போதுதான் பெண்களை தொட பயப்படுவார்கள் இல்லையெனில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கும். அன்று பாஞ்சாலிக்கு நீதி கிடைக்க வில்லை என்றாலும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் ஆனால் இந்த பாரத நாட்டில் பாரத பெண்களின் பாலியல் கொடுமைக்கு எந்த நியாயமும் கிடைக்க வில்லை. வெட்க கேடு... வெட்க கேடு...

விருந்து

                      எத்தனை அன்பான உறவாக இருந்தாலும் விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்குதான் . நாம் ஒரு வீட்டிற்கு விருந்தினராக சென்றால் ஒரு இரண்டு நாளைக்கு உபசரிப்பு பலமாக இருக்கும் அதோடு அந்த இரண்டு நாளில் நாம் சாப்பிட்ட தட்டை எடுக்க விடாமல் அவர்களே எடுத்து கழுவார்கள் அதே ஒரு பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் அவர்கள் சாப்பிடும் தட்டை நம்மை கழுவ வைத்து விடுவார்கள்.

                      அதுவரை நமக்கு இருந்து மரியாதை போய்விடும் வீட்டில் ஒருவராக மற்றவருக்கு அறிமுகப்படுத்தப்படுவோம் இப்படியே சொல்லி சொல்லி சம்பளம் இல்லாத வேலைக்காரியாக பயன்படுத்தபடுவோம். இது உறவில் மட்டுமல்ல நட்பிலும் உண்டு எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது. அதையும் தாண்டி எந்த காலத்திலும் அன்பு குறையாத மதிப்புள்ளம் கொண்டவர்களும் உண்டும்.

மழை





ஓலைக் குடிசைக்குள்
நீர் அருவியாய்
குற்றாலம்..!

அடிக்கி வைக்கப்பட்ட
பாத்திரங்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் முளைத்திருக்கின்றன..!

மழை வேண்டி
முளைப்பாரியிடும் ஏழை உழவன்
மழை வேண்டாம் என்று
ஒப்பாரி வைக்கும் ஏழை
இன்னொருவன்..!

மாடிவீட்டு முற்றத்தில்
மழையை ரசிக்கும் ஒருவன்
மச்சிவீட்டில் ஒழுகும் நீரை
வெறித்தப்படி இன்னொருவன்..!

எது எப்படியோ
சந்தோஷம் என்பது
ஒருவருக்கு மட்டுமே
வாய்திருக்கிறது..!

பாவம் அந்த கார்மேகம்
யார் வேண்டுதலுக்கு
செவிசாய்க்கும்?

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும்
இடிபோல வானுக்கும் இடி
மழை வந்தாலும் வராவிட்டாலும்...!

ஸ்ரீசந்திரா

உள்ளே... வெளியே...

அநியாயங்களைக் கண்டு
பொங்கி எழுந்த போராளிகள்
குற்றவாளிகளாய் உள்ளே..!

கணக்கில்லா குற்றங்களை
செய்த குற்றவாளிகள்
உல்லாசமாய் வெளியே..!

Tuesday 2 September 2014

புன்னகை

நீ உதிர்த்துவிட்டு போகும்
புன்னகையை சேகரித்து வைக்கிறேன்
உன்னிடம் திருப்பி கொடுப்பதற்கு..!

மந்திர புன்னகை

நான் அடிக்கடி
தொலைந்து போகிறேன்
உன் மந்திரபுன்னகையில்..!

கண்ணாடி

என்னைவிட அதிகமாக
கற்பனை செய்துகொள்கிறது
கண்ணாடி..!

Monday 1 September 2014

கண்ணீர் சிந்தும் வானம்

தேன்சிந்த வேண்டிய வானம்
உன் மவுனத்தின் வலியால்
கண்ணீர் சிந்துகிறது

கற்றலின் பெருமை


                  மனிதன் தன் உயர் வாழ்க்கைக்கு கல்வி கற்கிறான், பொருள் ஈட்டுகிறான், நல்ல வாழ்க்கத்துணையைப் பெறுகிறான் அறிவறிந்த மக்கட் பேற்றினை அடைகிறான். இன்றைய சூழ்நிலையில் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது கல்வி அதனால்தான் "இளமையிற் கல்" என்கிறது
பழமொழி இளமை காலத்தே படிப்பது மனதில் நிற்கும் என்பது கருத்துஇளமையில்தான் கற்க வேண்டும் பிறகு கற்க கூடாது என்பது கருத்தன்று, ஏனெனில் கற்பதற்கு வயது வரம்பில்லை படித்த அறிஞர்கள் படித்துக் கொண்டே இருக்கின்றனர்.

                                        யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
                                        சாந்துலகையும் கல்லாதாவாறு

                என்று கூறுகின்றார் வள்ளுவ பெருந்தகை ஒருவன் சாகும் வரை கற்கலாம் என்பது தான் இதன் கருத்து.

                                       உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
                                       பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

என்று கூறுகிறது புறனாறு.

                                       கற்க கடறக் கற்பவை கற்றபின்
                                       நிற்க அதற்குத் தக

என்கிறது திருக்குறள்

                                       கற்கை நன்றே கற்கை நன்றே
                                       பிச்சை புகினும் கற்க நன்றே

என்கிறது வெற்றி வேட்கை

                      வள்ளுவர் முதலில் என்ன செய்ய வேண்டும் என்கிறார்? கற்க என்கிறார் எவற்றை கற்பது? கற்பவையை கற்க பின்ன யாது செய்வது? கற்றல் வழி நிற்க வேண்டும் நடத்தையில் பண்பாட்டில் குறைவின்றி நிற்க என்கிறார்.

                     கல்வியின் பெருமையை அதன் முக்கியத்துவத்தை சான்றோர்கள் நூல்கள் வாயிலாக நமக்கு நிறைய சொல்லியிருக்கிறார்கள். முன்பு இளமையில் 'கல்' என்றது பழமொழி இன்று இளமையில் காத)ல் என்கிறது முதுமொழி ஏனென்றால் இப்போது எல்லாம் இளமையில் படிக்கின்றார்களோ இல்லையோ காதலை நன்கு படிக்கிறார்கள்.

                    நாம் கற்றவை மிகமிகக் குறைவு உலகில் முற்ற கற்றவர்கள் யாரும் இல்லை, இருக்கவும் முடியாது நாம் கற்க வேண்டியவை நிறைய உள்ளன அதனால்தான் ஔவையார்

                                     "கற்றது கையளவு கல்லாதது உலகளவு"

                   என்று கூறினார் இதன் பொருள் என்ன? நாம் முழுவதும் கற்றுவிட்டோம் என்று இறுமாப்புக் கொள்ளாமல் கற்க வேண்டும் என்பதுதான். கற்கும்போதே கேட்கின்றோம், கேட்கும் போதே கற்கின்றோம் கற்றலும, கேட்டலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. ஆகவே கற்பவையை கற்போம் கற்றல் வழி நிற்போம்.

கோயம்பேடு பேருந்து நிலையம்



                  ஆசியாவிலே மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம் தான் பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்க கூடிய இடமாக இருக்கிறது. எந்த நேரமும் பேருந்து வசதிகள், பயணிகள் தங்கும் விடுதிகள், உணவகங்கள், இலவச கழிப்பறைகள் என்று எல்லாமே இருக்கிறது ஆனால் ஒரு குளியளறை கூட இல்லை என்பதுதான் வருத்தப்படக்கூடிய விஷயமாக இருக்கிறது.

                  சின்ன சின்ன பேருந்து நிலையங்களில் கூட 5 ரூபாய் கட்டணத்தில் குளியளறை இருக்கிறது ஆனால் சென்னை மாநகரத்தில் லட்சம் பயணிகள் வந்தும் போகும் இடத்தில் இல்லாதது வேதணைக்குரியதாக இருக்கிறது.
பெரும்பாலும் வெகுதொலைவில் இருந்து வேலைக்காக இன்டர்வியூக்கு வருபவர்களும், தேர்வுக்காக வருபவர்களும் தான் அதிகம் இருக்கிறார்கள் இவர்கள் தனியறை எடுத்து குளித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு வசதியோ அதற்கான நேரமோ இவர்களுக்கு இல்லை. இது போன்ற பயணிகளுக்கு சுத்தமான குளியளறை இருந்தால்
வசதியாக இருக்கும்.