Tuesday 20 May 2014

சிறப்பு வாய்ந்த கோவில்களும் நானும்




                 கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோவில் இத்தலத்தில் மகாலிங்க சுவாமியை வந்து வணங்கினால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் என்பது வரலாறு. வரகுண பாண்டிய என்ற அரசன் இத்தலத்தில் தங்கி இறைவனை வணங்கி பிரமஹத்தி தோஷம் நீங்கி நலம் பெற்றான். நலம் பெற்றவுடன் ஒரு பெண்ணை விரும்பி திருமணம் முடித்தார் அப்பெண்ணின் அழகிய திருவுருவம் கண்டு இப்பெண் கடவுளுக்கு மட்டும் உரியவள் என்று கருதி மகாலிங்க பெருமானிடம் தன் மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறு மனம் உருக வேண்டினாராம் பெருமானும் ஏற்றுக்கொண்டார்.



                   மறுமுறை பெருமானை வழிபட சென்றபோது அப்பெண்ணின் வலது கை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு இருந்ததைக் கண்டு அச்சமுற்று அந்தப் பெண்ணை திருமண நாளன்று வலது கை என்னால் பற்றப்பட்டது தான் பிழை வேற எந்த பிழையும் இல்லை அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டாராம் அதன் பிறகு பெருமானும் முழுமையாக ஏற்றுக்கொண்டதாக வரலாறு சொல்கிறது. அந்தப் பெண் காந்திமதி தெய்வமாகி இத்தலத்திலே வீற்றிருக்கிறார். 




                          கர்நாடக மாநிலத்தில் கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகை போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமருதூர் மூகாம்பிகை சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள் . இந்தியாவிலே கொல்லூரிலும் திருவிடைமருதூரில் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது இத்திருகோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக சுற்றி வந்து மூலவரை வழிபாடு செய்தால் சித்த சுவாதினமின்மை மனநோய் பீடிக்கப்பட்டவர்கள் பைத்திம் முதலிய பெரும் நோய் மற்றும் செல்வம் பெருக திருமணத்தடை நீங்க குழந்தை பாக்கியம் பெற இங்கே வந்து வழிப்பட்டால் எல்லா தடைகளும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த மேரு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள். இவை யாவும் படித்த, பார்த்த கேட்டு தெரிந்துக் கொண்ட விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் எனக்கே அண்டை நாட்டில் இருக்கும் ஒருவர் சொல்லிதான் இந்த ஆலயத்திற்கு சென்றேன் அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும். 


No comments:

Post a Comment